சன் ஃபார்மா உலகளவில் ஜெனரிக் மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம். இந்த வெற்றி அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. கொல்கத்தாவை சேர்ந்த திலீப் சாங்வி எப்படி சன் ஃபார்மா எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பதை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்,
ரூ.10,000 முதலீட்டில் தொடங்கிய சன் ஃபார்மா: 1982ஆம் ஆண்டு திலீப் சாங்வி பட்டப்படிப்பை முடித்து விட்டு கொல்கத்தாவில் தனது தந்தையுடன் இணைந்து மருந்து விற்பனை செய்து வந்தார். ஜெனரிக் மருந்துகள் விற்பனையில் பெரிய லாபம் இல்லை என்பதை அறிந்த அவர், மருந்து விற்பனை குறித்த ஆய்வில் இறங்கினார்.

அப்போது , மனநலம் சார்ந்த மருந்துகள் நல்ல லாபம் தந்தாலும் , பெரிய மருந்து நிறுவனங்கள் விற்பதில்லை என்பதை அறிந்தார். உடனே தந்தையிடம் இருந்து 10,000 ரூபாய் கடன் வாங்கி 1982இல் சன் ஃபார்மா நிறுவனத்தை தோற்றுவித்தார்.
லித்தோசன் மருந்து மூலம் விற்பனை தொடக்கம்: பைபோலார் டிஸாஸ்டர்களுக்கான ”லித்தோசன்” மருந்துகள் கிழக்கு இந்திய பகுதிகளில் கிடைக்கவில்லை. எனவே நண்பர்கள் உதவியோடு இயந்தியரங்களை வாங்கி குஜராத்தின் வாபி நகரில் 3,000 சதுர அடியில் ஒரு ஆலையை நிறுவினார்.
லித்தோசன் மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய தொடங்கினார். முதலில் 5 விதமான மருந்துகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால் நிறுவனம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே 7.5 லட்சத்திற்கு விற்பனை ஆனது. 1987இல் இதயம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய தொடங்கினார்.

1994இல் ஐபிஓ வெளியீடு: உள்நாட்டுடன் நின்றுவிடாமல், கனடா, ரஷ்யா நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்தார். 1994இல் சன் பார்மா நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு 500 கோடி நிறுவனமாக மாறியது. இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு, அதன் வெளியீட்டை விட 55 மடங்கு விட அதிகமாக விண்ணப்பம் பெற்றது இது தான் முதல் முறை.
உலகளவில் முக்கிய இடம்: சந்தையில் போட்டி அதிகரிக்கவே திலீப் , அமெரிக்காவின் கராகோ மருந்து நிறுவனத்தை வாங்கினார் மற்றும் பிரிட்டனின் எம்ஜே நிறுவனத்தின் 44.3% பங்குகளை வாங்கினார். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ப்ரீட்டன் சந்தையிலும் கால்பதித்தது சன் ஃபார்மா.
கண் மருந்து, நுரையீரல் மருந்து என படிப்படியாக தொழிலை விரிவாக்கம் செய்தார். இதன் மூலம் 1999இல் சன் ஃபார்மா இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் முதல் 10 இடங்களை பிடித்தது. 2002இல் 3 பில்லியன் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அப்போது இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் முதல் 5 இடங்களில் ஒன்றானது சன் ஃபார்மா.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்: 2015இல் , ரேன்பேக்ஸி நிறுவனத்தை 2000 கோடிக்கு வாங்கியது சன் ஃபார்மா நிறுவனம். ஐந்து கண்டங்களில் 47 இடங்களில் ஆலை வைத்திருந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஜெனரிக் மருந்து உற்பத்தியாளர் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்தது.
தற்போது இந்திய மருந்து நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்திலும், உலகளவில் 4ஆவது இடத்திலும் உள்ளது. சன் ஃபார்மாவின் ஆண்டு வருவாய் மட்டும் 40 ஆயிரம் கோடி. திலிப் சாங்வி 1,50,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு பெற்று 2015இல் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications