இந்தியாவில் வீடு வாங்குவது என்பது பலருக்குமான கனவு. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையிலாவது ஒரு வீட்டை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அண்மைக்காலமாக நிலவரம் கவலைக்குரியதாக மாறி வருகிறது. டெவலப்பர்கள் என்று சொல்லப்படுகிற கட்டுமான நிறுவனங்கள் அதிக லாபத்தை வழங்கக்கூடிய ஆடம்பர சொகுசு வீடுகளை கட்டுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக 2022-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ஆம் ஆண்டில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தியாவில், மலிவு விலையில் உள்ள வீடுகளின் விற்பனை 2022-ஆம் ஆண்டில் 2,51,198 யூனிட்களாக இருந்தது. ஆனால் தற்போது 2023-ஆம் ஆண்டில் 235,340 யூனிட்களாக குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் பகுப்பாய்வு நிறுவனமான ப்ராப்ஈக்விட்டியின் தரவுகளின்படி, இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் ரூ. 60 லட்சம் வரை விலையுள்ள மலிவு விலை வீடுகளின் விற்பனை, இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 4% குறைந்து, 61,121 யூனிட்டுகளாக உள்ளது. மலிவு விலையில் வீடுகள் குறைவாக வழங்கப்படுவதாலும், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை விரும்புவதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி-என்சிஆர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, புனே மற்றும் அகமதாபாத் ஆகியவை இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்டுள்ள முதல் 8 நகரங்கள் ஆகும். கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில், ரூ. 60 லட்சம் என்ற விலையில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 63,787 யூனிட்களாக இருந்தது.
2024-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், மலிவு விலையில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 33,420 யூனிட்களாக உள்ளது. இது 2023-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஒப்பிடும்போது 53,818 யூனிட்களாக இருந்தது. இதிலிருந்து நாம் இந்த ஆண்டில் குறைந்த வீடுகளின் விற்பனையை தெரிந்து கொள்ளலாம்.
லாபம் அதிகம் கிடைக்கும் என்பதால், டெவலப்பர்கள் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக, குறைந்த விலை வீடுகளின் விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது. 2022-ஆம் ஆண்டில் 251,198 வீடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2023-ஆம் ஆண்டில் குறைந்த விலை வீடுகளின் விற்பனை எண்ணிக்கை 235,340 ஆக குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 226,414 வீடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் விற்பனை எண்ணிக்கை 188,233 ஆக குறைந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டில் மீண்டும் விற்பனை எண்ணிக்கை 217,274 ஆக உயர்ந்தது.
2024 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ரூ. 60 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகளின் விற்பனை பல்வேறு நகரங்களில் மாற்றம் கண்டுள்ளன. அந்த வகையில் மும்பை மெட்ரோபாலிட்டன் ஏரியாக்களில் 2023-ஆம் ஆண்டில் 23,401 யூனிட்களாக இருந்த விற்பனை, 2024-ஆம் ஆண்டில் 28,826 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் 2023-ஆம் ஆண்டில் 14,532 யூனிட்களில் இருந்து, 2024-ஆம் ஆண்டில் 12,299 ஆக சரிவைக் கண்டது.
அதேபோல, அகமதாபாத்தின் விற்பனை 8,087 யூனிட்டுகளில் இருந்து, 6,892 யூனிட்களாக சரிந்தது. அதே நேரத்தில் ஹைதராபாத்தில் விற்பனை 3,674 யூனிட்டுகளில் இருந்து 3,360 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. சென்னையில் 3,295 யூனிட்களில் இருந்து 2,003 யூனிட்களாகவும், பெங்களூரில் 5,193 யூனிட்களில் இருந்து 2,801 யூனிட்களாகவும் சரிவைக் கண்டது. மாறாக, கொல்கத்தாவில் 2,831 யூனிட்களில் இருந்து 3,741 யூனிட்களாக விற்பனை உயர்ந்துள்ளது. டெல்லி-என்.சி.ஆர் விற்பனையானது, முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 2,774 யூனிட்களில் இருந்து 1,199 யூனிட்களாகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
குறைந்த விலை வீடுகளின் தட்டுப்பாடு அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம். நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டு கனவை நனவாக்குவதில் இது பெரும் தடையாக உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், கட்டுமான நிறுவனங்கள் இணைந்து உதவித் திட்டங்கள் (subsidy schemes) போன்ற நடவடிக்கைகளை எடுத்து, குறைந்த விலையில் வீடுகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம், வீடு என்பது அனைவருக்கும் எட்டக்கூடிய இலக்காக மாறும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications