வாழ்க்கையில் பற்றற்ற நிலையை அடைவதற்கு உறுதியான மனோதிடம் வேண்டும். அதிலும் கஷ்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை விட்டுவிட்டு துறவறம் பூணுவதற்கு உண்மையிலேயே மனதளவில் மிக உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி திபேஷ் ஷா. அவர் தனது மனைவி பிகா ஷாவுடன் தனது அனைத்து சொத்துக்களையும் விட்டுவிட்டு துறவறம் பூண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது மகனும் அவரைத் தொடர்ந்து மகளும் துறவறம் பூண்டனர்.

5 வருடங்களுக்கு முன்பு திபேஷ் ஷாவின் 12 வயது மகன் பாக்யரத்னா விஜயாஜி துறவறம் பூண்டார். பின்னர் அவரது மகள் பாவ்யா ஷாவும் துறவறம் எய்தினார். திக்ஷா சடங்கில் பங்கேற்பற்காக பாக்யரத்னா தனது பெராரி காரில் வந்திறங்கினார். அவரது பெற்றோர் திபெஷ் ஷாவும், பிகா ஷாவும் விலை உயர்ந்த சொகுசு கார் ஜாகுவாரில் வந்து இறங்கினர்.
வாழ்க்கையில் சேர்த்து வைத்த அத்தனை கோடிக் கணக்கான ரூபாய் சொத்துக்களையும் விட்டுவிட்டு திபேஷ் ஷாவின் குடும்பம் இல்லற வாழ்க்கையை விட்டுவிட்டு துறவறம் பூண்டது.
சூரத்தில் மிகப் பெரிய வைர வியாபாரியாக இருந்தார் திபேஷ் ஷா. அவரது நிறுவனம் ஆண்டுக்கு ரூ.15 கோடி லாபம் ஈட்டியது. இருப்பினும் அவரும் அவரது மனைவியும் தங்களது தொழிலை மூட்டைக்கட்டிவிட்டு துறவறத்தை தேர்ந்தெடுத்தனர்.
ஆடம்பரமான சொத்துகளை விட்டுவிட்டு இந்த தம்பதியர் அமைதியான துறவறத்தை பெற்றனர். தங்களது வாழ்க்கையை பிற துறவிகளுடன் சேர்ந்து பல நூறு கிலோமீட்டர்களை நடந்து கழிக்க உள்ளனர். துறவறத்தை மேற்கொள்வதற்காக திபேஷ் 350 கிமீ நடந்து சென்றுள்ளார். பெண் துறவிகளுடன் சேர்ந்து பிகா ஷா 500 கிமீ பாதயாத்திரையை மேற்கொண்டார்.

இதுபற்றி திபேஷ் ஷா கூறுகையில், எனது மகள் துறவறத்தை மேற்கொண்டபோது அதேநாளில் நாங்களும் துறவியாக மாற நினைத்தோம். நான் சொத்துக்களையும் வெற்றியையும் சம்பாதித்தேன். ஆனால் இறுதியில் அமைதியையும் மகிழ்ச்சியையும் தேடி நான் செய்த பயணம் முடிவடியவில்லை.
ஷாவின் குடும்பம் ஆன்மிகத்துக்கே அர்ப்பணிப்பதற்காக வாழ்ந்து வந்தது. திபேஷின் தந்தை பிரவின் மிகப் பெரிய வெல்லம் மற்றும் சர்க்கரை வியாபாரத்தை செய்து வந்தார். திபேஷ் குடும்பம் துறவறம் மேற்கொண்டதும் பிரவின் தனது குடும்பத்தாருடன் சூரத்துக்கு குடிபெயர்ந்து துறவிகளுக்கு அருகே வசிக்கத் தொடங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications