டெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலத்தில் நேரடி வரிவசூல் 182 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, வரி வசூல் ஆகிய நடைமுறைகள் கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன இதன் விளைவாக வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும், வரி வசூலும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2023- 24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் 19.60 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூலாகியிருக்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 182 சதவீதம் அதிகமாகும். Time Series Data என்ற பெயரில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 -24 ஆம் நிதியாண்டில் 9.11 லட்சம் கோடி ரூபாய் நிறுவன வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டு காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது 2014-15இல் நிறுவனங்கள் செலுத்திய வரி 4.29 லட்சம் கோடிகள் தான்.

இதே காலகட்டத்தில் தனிநபர் வருமான வரி வசூல் 4 மடங்காகி 10.45 லட்சம் கோடியாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக பதவியேற்ற 2014 -15 ஆம் நிதி ஆண்டில் நேரடி வரி வசூல் 6.96 லட்சம் கோடியாக இருந்தது.
இதில் நிறுவனங்களின் வரி பங்களிப்பு 4.29 லட்சம் கோடி ரூபாய் ஆகவும், தனி நபர்களின் வருமான வரி பங்களிப்பு 2.66 கோடி ரூபாயகவும் இருந்தது. அதேபோல 2014 - 15 ஆம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 4.04 கோடியாக இருந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டில் அது 8.61 கோடியாக அதிகரித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 113 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி- இல் நேரடி வரிகளின் பங்களிப்பு 2014 -15 ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாக இருந்து தற்போது அது 6.64 சதவீதம் என அதிகரித்துள்ளது.
வரி வசூல் அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும் வரி வசூலுக்காக அரசு செய்த செலவினம் கணிசமான அளவு குறைந்துள்ளது. வரி வசூலுக்காக கடந்த நிதியாண்டில் அரசு செய்த செலவினம் 0.44 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இது 2014 ஆம் ஆண்டில் 0.59 சதவீதமாக இருந்தது.
மின்னணு முறையில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வது, தானியங்கி வரி செயலாக்க நடைமுறைகள் உள்ளிட்ட வரி நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதன் காரணமாகவே இந்தியாவில் வரி வசூலும் அதிகரித்து அதற்காக அரசு செய்யும் செலவினமும் குறைந்துள்ளது.
Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications