டெல்லி: மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தலிருந்தே மத்தளம் போல் இரு புறம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
ஏனெனில் ஒரு புறம் வாட்டி வதைக்கும் பொருளாதார மந்தம். மறுபுறம் வருவாய் வீழ்ச்சி. இவை இரண்டும் சேர்ந்து மத்திய அரசை ஆட்டிப்படைத்து வருகிறது எனலாம்.
ஒரு புறம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உற்பத்தி துறையை ஊக்கப்படுத்தவும், தொழில்துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டும், கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்தது.
கார்ப்பரேட் வரி குறைப்பு
அதுவும் கொஞ்ச நஞ்சம் அல்ல. புதிதாக அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் 15% மட்டும் வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும். அனைத்து சர் சார்ஜ்கள் மற்றும் செஸ் போன்றவைகளை எல்லாம் சேர்த்தால் உற்பத்தி நிறுவனங்கள் 17.01 % வரி செலுத்த வேண்டி இருக்கும் என்றும், இதே ஒரு நிறுவனம் அரசின் எந்த ஒரு ஊக்கத் தொகையோ அல்லது சலுகைகளையோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் 22% மட்டும் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இது கூடுதல் கட்டணங்களுடன் 25.17% ஆக இருக்கும் என்றும் அறிவித்தது.
வருமானம் வீழ்ச்சி காணும்
இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான இந்தியாவின் கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரி வசூலானது இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக வீழ்ச்சி காண வாய்ப்புள்ளதாக, அரை டஜன் மூத்த வரி அதிகாரிகள் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சி, கார்ப்பரேட் வரி குறைப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.
வரி வசூல் இலக்கு
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் ஆண்டுக்கு 13.5 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு வைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் வரி வசூல் 17% அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவையில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் வர்த்தகமும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் முதலீடுகளையும், வேலைகளையும் குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. இது வரி வசூலையும் குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது.
வளர்ச்சி வீழ்ச்சி
இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5% வளர்ச்சியை மட்டுமே காணும் என்றும், இது 11 ஆண்டுகளில் உள்ள மெதுவான வளர்ச்சியாக இருக்கும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. ஜனவரி 23ம் தேதி நிலவரப்படி 7.3 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வரி வசூலிக்க முடிந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட 5.5% குறைவு என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வரி வசூல் குறையும்
முதல் மூன்று காலாண்டுகளுக்கு முன்கூட்டியே நிறுவனங்களிடமிருந்து வசூலித்த பின்னர், இறுதி மூன்று மாதங்களில் ஆண்டு நேரடி வரிகளில் 30 - 35% வரை பெறுவார்கள். இது கடந்த மூன்று ஆண்டுகளின் தரவு காட்டுகிறது. ஆனால் ராய்ட்டர்ஸ் பேட்டி கண்ட மூத்த அதிகாரிகள் அவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்த போதிலும், இந்த நிதியாண்டில் வரி வசூல் 2018 - 19ல் வசூல் செய்யப்பட்ட 11.5 லட்சம் கோடி ரூபாய்க்கு கீழ் குறைய வாய்ப்புள்ளது.
முதல் வீழ்ச்சி
இது குறித்த மற்றொரு அதிகாரி கூறுகையில், நேரடி வரி வசூலில் வீழ்ச்சி காணப்படுவது இதுவே முதல் முறை என்றும் டெல்லியில் ஒரு அதிகாரி கூறியுள்ளார். இந்த ஆண்டிற்கான நேரடி வரி வசூல் 2019ம் நிதியாண்டில் சுமார் 10% கீழ் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே மும்பையை சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி கடந்த ஆண்டு வசூலித்த வரியை நாங்கள் வசூலித்தால் நாங்கள் மிக மகிழ்ச்சியடைவோம். ஆனால் அப்படி நடப்பது மிக கஷ்டம். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளாராம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications