மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி பிரிவில் இதுவரையில் 3.80 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்து கடந்த ஆண்டை காட்டிலும் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023-24 ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான முன்கூட்டிய வரி (Advance Tax) வசூல் ஜூன் 17ஆம் தேதி நிலவரப்படி சுமார் 1,16,776 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 13.70 சதவீத வளர்ச்சியை பதவி செய்த நிலையில் இந்த ஆண்டும் கிட்டத்தட்ட இதே 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் 17.06.2023 நிலவரப்படி நேரடி வரி கீழ் 3,79,760 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. இதில் கார்ப்பரேஷன் வரி (சிஐடி) 1,56,949 கோடி ரூபாயும், தனிநபர் வருமான வரி மற்றும் பத்திர பரிவர்த்தனை வரி (STT) கீழ் மொத்தமாக 2,22,196 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டு துவங்கி ஜூன் 17 வரையிலான 78 நாட்களில் வரி வசூலில் ரீஃபண்டுகளை செலுத்துவதற்கு முன்பு கணக்கிட்டால் மொத்த வசூல் அளவு 4.19 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் சுமார் 12.73 சதவீத வளர்ச்சியாகும்.
இதில் கார்ப்பரேஷன் வரி ரூ.1.87 லட்சம் கோடியும், தனிநபர் வருமான வரி மற்றும் பத்திர பரிவர்த்தனை வரி ரூ.2.31 லட்சம் கோடியாகும். நடப்பு நிதியாண்டில் ஜூன் 17ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சுமார் ரூ.39,578 கோடி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications