பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிகப்படியான நிதி பற்றாக்குறையில் இருப்பது பட்ஜெட் அறிக்கையின் மூலம் உறுதியான நிலையில், வருமானத்தையும் நிதி திரட்டும் அளவீட்டைப் பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.
ஒருபக்கம் எல்ஐசி ஐபிஓ வெளியிட்டு அதன் மூலம் 65000 முதல் 75000 கோடி ரூபாயை திரட்டும் பணியிலும், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் நிதி திரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
மோடி அரசு
மத்திய அரசின் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கையின் மூலம் ஜிஎஸ்டி வரி ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் அளவீட்டிலும் வரலாற்று உச்சத்தை அடையும் நிலையை அடைந்துள்ளது.
ஜே.பி.மொஹாபத்ரா
மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவரான ஜே.பி.மொஹாபத்ரா கூறுகையில், நடப்பு நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் அளவை ஏற்கனவே திருத்தப்பட்டு 12.50 லட்சம் கோடி ரூபாய் என அறிவித்துள்ள நிலையில், தற்போது இலக்கை விடவும் அதிகமாக வசூலிக்கப்படும் நேரடி வரி வசூலில் வரலாற்று உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.
காரணம்
வருமான வரிச் செலுத்துவதில் பல மாற்றங்கள் செய்து வருமான வரி செலுத்துவோருக்கு ஏதுவான தளத்தை அளிக்கப்படுவதன் மூலம், வருமான வரி துறைக்குக் கூடுதல் தகவல்கள் சிறப்பான தரவு சரிபார்க்கும் தளத்தை உருவாக்கிய காரணத்தால் தனிநபர் வருமான வரி மற்றும் கார்பரேட் வரி வசூல் அதிகரிக்க முக்கியக் காரணம் என மொஹாபத்ரா கூறியுள்ளார்.
பிப்ரவரி 1 நிலவரம்
பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரத்தின் படி நேரடி வரி வசூல் அளவு 10.38 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த பட்ஜெட் கணிப்பு அளவான 11.08 லட்சம் கோடி ரூபாயை விட 70,000 கோடி ரூபாய் மட்டுமே குறைவு. தற்போது வசூலிக்கப்பட்ட 10.38 லட்சம் கோடி ரூபாய் கடந்த வருடத்தின் அளவை விடவும் அதிகம். இந்திய வரலாற்றில் இதுவரை மத்திய அரசு நேரடி வரி வசூல் பிரிவில் அதிகப்படியாக 11.18 லட்சம் கோடி ரூபாயை பெற்றுள்ளது.
வரலாற்று உச்சம்
நடப்பு நிதியாண்டில் இந்த அளவீட்டை தாண்டி கட்டாயம் வரலாற்று உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் கட்டாயம் 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என மத்திய நேரடி வரி வாரியம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் CBDT அமைப்பின் டார்கெட் அளவு 12.50 லட்சம் கோடி ரூபாய். இந்த அளவீட்டை தாண்டுமா..? மார்ச் 31 வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications