தமிழ் நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
கடந்த அதிமுக ஆட்சியின்போதே 5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் இருப்பதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பற்றிய பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் தமிழகம், கொரோனாவினால் இன்னும் மோசான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மோசமான வீழ்ச்சி
பல துறைகளிலும் வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது. பல துறைகளில் கடன் அதிகரித்துள்ளது. இதனை இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் வெகுவாக சரிந்துள்ளது. மற்ற எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு இல்லை எனவும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இதனால் நன்மை இல்லை
இதற்கிடையில் வருமான வரி, ஜிஎஸ்டி, பெட்ரோல் டீசல் மீதான நேரடி வரிகளை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சமுதாயத்திற்கு நன்மை அளிக்காது. அதே நேரத்தில் ஜீர டேக்ஸ் என்பதும் சரியில்லை. மாறாக சரியான நேரத்தில் சரியான வரியை வசூலிப்பது சரியானதாகும்.
ஏழைகள் மேலும் ஏழையாகின்றனர்
மேலும் ஜீரோ டெக்ஸ் என்பது பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு பலனை அளிக்கும். ஆனால் ஏழை மக்களுக்கு அல்ல, ஏழைகள் மேலும் ஏழையாகின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகின்றனர். ஏனெனில் வரி செலுத்துவது என்பது மேல்தட்டு மக்களே. அந்த வரி வசூலை வைத்து தான், அரசு பல திட்டங்களை செயல்படுத்தும்.
மக்களை பாதிக்கும்
அப்படி இருக்கும் பட்சத்தில் நேரடி வரிகள் என்பது மக்கள் கையில் இருக்கும் பணத்தினை இன்னும் வாரி சுருட்டிக் கொண்டே போகின்றது. உதாரணத்திற்கு பெட்ரோல், டீசல் மீதான வரியானது இன்னும் மக்களுக்கு கூடுதல் சுமையையே தருகின்றது. இன்று அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள பெட்ரோல், டீசல் விலை, அனுதினமும் அதிகரித்து வருகின்றது. இதனை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக பெட்ரோல், டீசல் மீதான வரி விகிதம் இன்னும் மக்களை வாட்டி வதைக்கும்.
மக்களுக்கு உதவுவதே எங்களின் நோக்கம்
ஒவ்வொரு குடும்பத்தின் மீது சுமார் 2.63,976 கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறும் அறிக்கையில், கடைசி 5 ஆண்டில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயாக அதகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சரியான நபர்களிடம் இருந்து வரி வசூலித்து கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், அதுவே சமூகநீதி என்றும் பிடிஆர் கூறியுள்ளார்.
சு சுவாமியின் கருத்து
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்யா சபாவின் உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி, டைம்ஸ் நவ்க்கு அளித்த பேட்டியில், இந்திய பொருளாதாரத்தில் தேவை அதிகப்படுத்த நினைத்திருந்தால் அரசு வருமான வரியை முழுமையாக ஒழித்து இருக்க வேண்டும். இதன் மூலம் தேவையை அதிகப்படுத்தி இருக்க வேண்டும். இது தான் தேவை அதிகரிக்கும். கார்ப்பரேட் வரி குறைப்பு என்பது இதற்கு உதவாது. இதனால் மக்களுக்கு எந்த பலனும் என்று கூறியிருந்தார்.
மக்களின் எதிர்பார்ப்பு இது தான்
உண்மையில் நேரடி வரிகள் என்பது அதிகரிக்க அதிகரிக்க மக்களின் நிதி நெருக்கடி என்பது இன்னும் அதிகரிக்க செய்யும். இதனால் தேவையானது மேலும் சரியும். நுகர்வும் குறையும். ஏற்கனவே கொரோனாவினால் மிகுந்த நெருக்கடியில் உள்ள மக்கள் மேற்கொண்டு, பின்னோக்கி தான் செல்வார்கள். மொத்தத்தில் ஏழை மேலும் ஏழையாகிக் கொண்டே தான் உள்ளனர். பணக்காரர்கள் மேற்கொண்டு பணகாரர்கள் ஆகிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
ஆக அரசு இதனை கருத்தில் கொண்டு, எரிபொருள் விலை, அடிப்படை வாழ்வாதரத்தினை பாதிக்கும் வகையிலான விலை வாசியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே இங்குள்ள அனைவரின் வேண்டுகோள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications