4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்

சென்னை: நமது 4.54 பில்லியன் வருட பழமையான பூமியில் எண்ணற்ற பொக்கிஷங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் புதையல் வேட்டை என்பது மிகவும் வேடிக்கையான ஒன்றாகும். சமீபத்தில் ஒரு குழு, புதையல் எடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி, அதிக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் ஒரு குழு தங்க காசுகள் நிறைந்த பானையை கண்டுபிடிப்பது போன்றும், அதனை திறந்து பார்க்கும் பொழுது, பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையும் வீடியோ இணையதளங்களில், அதிக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்

இந்த ட்ரெண்டிங் வீடியோவில் புதையல் வேட்டைக்காரர்கள் புதையலைத் தோண்டி எடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் தங்கம் நிரப்பப்பட்ட பானைக்கு நடுவே பாம்பு இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது சந்தேகங்களை எழுப்பும் படியாக உள்ளது என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த தங்கம் கொண்ட பானையானது ஒரு பெரிய கல்லிற்கு கீழ் இருந்ததால், குழுவினர் கல்லை இடமாற்றம் செய்ய ஒரு டிராக்டரையும், கனமான இரும்பு சங்கிலியையும் பயன்படுத்துவது போன்ற காட்சிகளும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் இந்த குழு, அந்த பாறையை இழுக்க முயற்சிக்கும்போது சங்கிலிகள் இரண்டு துண்டாக பிரியும் காட்சிகளும் உள்ளன. அதன் பின் அந்த பாறையின் எடையை குறைக்க பெரிய இரும்பு கம்பியால் கல்லை உடைக்க முயற்சிக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, புதையலை கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், குழுவில் உள்ளவர்கள், இறுதியாக பெரிய பாறையை இடமாற்றம் செய்கின்றனர். அதன் பின், மண்ணில் புதைந்திருந்த பானை போன்ற பொருளைக் கண்டுபிடித்தனர். பானையைத் திறந்து பார்த்தபோது, தங்கத்தின் மேல் பாம்பு ஒன்று தங்கியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். ஆபத்தான பாம்பு திடீரென தோன்றியதால் புதையல் வேட்டையில் ஈடுபட்ட குழு மிரண்டுபோனது. பாம்பை பாதுகாப்பாக அகற்றிய பிறகு, அவர்கள் பானையிலிருந்து புதையலை மீட்டனர், தங்க நாணயங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை கண்டுபிடித்தனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Felezyabie என்ற பயனர் பகிர்ந்துள்ளார்.

பல ஆன்லைன் யூஸர்கள் இந்த வீடியோவை போலியானது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். பழமையான புதையலில் எப்படி பாம்பு வந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. மேலும் கண்டுபிடிக்கப்பட்ட பானையில் கம்பளித்துண்டு ஒன்று இருந்ததை பற்றியும் பல கருத்துக்களை மக்கள் கமெண்ட் பாக்ஸ்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் வீடியோவை பகிர்ந்த அந்த நபர், "இந்த வீடியோ அகழ்வாராய்ச்சி எவ்வாறு செய்யப்படுகிறது? என்பதை காட்டுவதற்காகத்தான்" என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த போஸ்டில் "ஹாய்! இந்த வீடியோ ஆய்வாளர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகத்தான். இது உண்மையானது என்று நாங்கள் யாரும் கூறவில்லை", என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+