சென்னை: திறமைக்கான அங்கீகாரமும், வேலைவாய்ப்பும் தேடி பலர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஒரு IT தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய, இந்திய ஊழியர் ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டார். அதற்காக பழிவாங்கும் நோக்கில் நிறுவனத்தின் சர்வர்-களை ஹேக் செய்து தகவல்களை அழித்துள்ளார். இதன் காரணமாக, அந்த நிறுவனத்திற்கு சுமார் ரூ. 5.66 கோடி மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள NCS நிறுவனத்தில் பணியாற்றி வந்த 39 வயதான கந்துலா நாகராஜுவை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது. அந்த பணி நீக்கத்தை தொடர்ந்து அவரைப் பற்றிய தகவல்களும் அந்நிறுவத்திற்கு கிடைத்துள்ளது. அதாவது அந்நிறுவனத்தின் QA அமைப்பில் சென்று சைபர் கிரைம்களை செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தன்னை பணி நீக்கம் செய்ததற்கு பழிவாங்குவதற்காக 180 விர்ச்சுவல் சர்வர்களை நீக்கி NCS நிறுவனத்திற்கு சுமார் ரூ 5.66 கோடி நஷ்டத்தை நாகராஜு ஏற்படுத்தியுள்ளார். இதனால் இவருக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இவர் இந்தியாவை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

புதிய சாப்ட்வேர் (software) மற்றும் ப்ரோக்ராம்-களை (program) சோதிக்க பயன்படுத்தப்படும் NCS நிறுவனத்தின் QA அம்சத்தை பராமரிப்பதற்காக 20 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். அதில் நாகராஜு ஒரு பகுதியாக இருந்தார். நாகராஜு தனது பணிக்காலத்தில் நல்ல பங்களிப்பை வழங்கியதாக நம்பினாலும், பணித்திறன் குறைவு காரணமாக அக்டோபர் 2022-இல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணி நீக்கம் அவரை குழப்பமடையச் செய்தது மற்றும் வருத்தமடையச் செய்தது என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் உடனடியாக வேலை கிடைக்காததால், இந்தியா திரும்பிய அவர், லாகின் கிரிடென்ஷியல்-களைப் (Login Credential) பயன்படுத்தி அனுமதி இல்லாமல் NCS அமைப்பை திறந்துள்ளார். இதன் மூலம் ஹேக்கிங் செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஜனவரி 6 மற்றும் ஜனவரி 17, 2023க்கு இடையில், நாகராஜு இந்தியாவில் இருந்து 6 முறை NCS கணினியை பயன்படுத்தி உள்ளார். பிப்ரவரி 2023-இல் புதிய வேலை கிடைத்த பின்னர், சிங்கப்பூருக்கு திரும்பிய அவர், தனது முன்னாள் NCS சக ஊழியரின் வைஃபை நெட்வொர்க்கைப் பயன்படுத்தி பிப்ரவரி 23, 2023 அன்று மீண்டும் NCS அமைப்பை பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு அனுமதி இல்லாமல் பயன்படுத்திய சமயங்களில், சர்வர்களை நீக்கக்கூடிய கணினி ஸ்கிரிப்ட்களை பயன்படுத்தியுள்ளார்.
இவர் ஏற்படுத்திய பாதிப்பு மார்ச் 2023-இல் கண்டறியப்பட்டது. அந்த மாதம், NCS-ன் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை 13 முறை பயன்படுத்தியிருக்கிறார் நாகராஜு, மார்ச் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 நாட்கள் தொடர்ச்சியாக, சர்வர்-களை நீக்கம் செய்யும் வகையில் ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தி 180 விர்ச்சுவல் சர்வர்களை அளித்துள்ளார்.
ஏப்ரல் 11, 2023 அன்று, நாகராஜு மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்த விசாரணையில், நாகராஜு பயன்படுத்திய பல ஐபி முகவரிகள் (IP Addresses) கண்டறியப்பட்டன. நாகராஜுவின் கணினி பறிமுதல் செய்யப்பட்டது. அதில், அவர் பயன்படுத்திய ஸ்கிரிப்ட் மற்றும் விர்ச்சுவல் சர்வர்களை எவ்வாறு அழிப்பது என்பது குறித்த கூகுள் தேடல் வரலாறு ஆகியவை கண்டறியப்பட்டன. பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு NCS அமைப்பை அணுக அனுமதி இல்லை என்பது தெரிந்தும், அவர் தனது செயல்களால் NCS நிறுவனத்திற்கு SGD 917,832 என்ற பெரும் இழப்பையும், இயக்க செயல்பாடுகளில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தினார் என்று திங்கட்கிழமை அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
தடயங்களை மறைக்க முயன்றும், காவல் துறையின் விசாரணையில் நாகராஜுவின் குற்றம் நிரூபணமாகி, அவருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications