டிஷ் டிவி தலைவர் ஜவஹர்லால் கோயல் திடீர் ராஜினாமா.. இனி என்ன ஆகும் நிறுவனம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒளிபரப்பு செயற்கைக்கோள் சேவை வழங்குநரான டிஷ் டிவியின் தலைவரான ஜவஹர்லால் கோயல் அந்நிறுவனத்தின் குழுவில் இருந்து விலகினார்.

ஜவஹரின் பதவி விலகல் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த வெற்றி என கூறப்படுகிறது.

மேலும் ஜவஹர் லால் கோயல் விலகிய பிறகு அந்த இடத்திற்கு வேறு யாரையும் நியமிக்கும் திட்டமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்.. டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் எதையும் வாங்காதீங்க..!மக்களே உஷார்.. டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் எதையும் வாங்காதீங்க..!

டிஷ் டிவி இயக்குனர்

டிஷ் டிவி இயக்குனர்

டிஷ் டிவி நிறுவனத்தின் இயக்குநர் ஜவஹர் லால் கோயல் நேற்று அதாவது 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று எழுதிய கடிதத்தின் மூலம், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம் என டிஷ் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சவால்

சவால்

சமீபத்தில், டிஷ் டிவி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் துவா, அவர்கள் பேட்டியளித்தபோது, 'டிஷ் டிவி பல சவால்களை எதிர்கொண்டது என்றும், இந்த ஆண்டு எங்களுக்கு ஒரு சீரான ஆண்டு அல்ல என்றும், கார்ப்பரேட் மற்றும் வணிக முன்னணியில் சவால்களை எதிர்கொண்டோம் என்றும் தெரிவித்தார்.

அனில்குமார் துவா

அனில்குமார் துவா

மேலும் சிரமங்கள் இருந்தபோதிலும், டிஷ் டிவி நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது என்றும், இந்தியாவில் உள்ளடக்க விநியோகத்தில் மிகவும் பொருத்தமான நிறுவனங்களில் ஒன்றாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்பட்டு வருகிறது என்றும் அனில்குமார் துவா தெரிவித்தார்.

 யெஸ் பேங்க்

யெஸ் பேங்க்

டிஷ் டிவி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான யெஸ் பேங்க் லிமிடெட் 24 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள நிலையில் டிஷ் டிவி போர்டை மறுசீரமைக்க கோயல் உல்பட ஒருசில நபர்களை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தது. இதனையடுத்து கோயல் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

புதிய தொடக்கம்

புதிய தொடக்கம்

கோயல் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த InGovern Research Services நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராம் சுப்ரமணியன், 'டிஷ் டிவி நிறுவனத்திற்கு இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்றும், ப்ரோமோட்டர்களுக்கும் யெஸ் வங்கிக்கும் இடையேயான சர்ச்சை விரைவில் தீர்க்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

பங்கின் விலை உயர்வு

பங்கின் விலை உயர்வு

டிஷ் டிவி இயக்குநர் கோயல் பதவி விலகிய தகவல் வெளியானதும் அந்நிறுவனத்தின் பங்கின் விலை அதிகரித்தது. நேற்று காலை ரூ.15.50 வர்த்தகமான இந்நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகம் முடிந்தபோது ரூ.16.80 வர்த்தகம் ஆனது. அதுமட்டுமின்றி வரும் நாட்களின் பங்கின் விலை இன்னும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dish TV director Jawahar Goel steps down from the board

Dish TV director Jawahar Goel steps down from the board | டிஷ் டிவி தலைவர் ஜவஹர்லால் கோயல் திடீர் ராஜினாமா.. இனி என்ன ஆகும் நிறுவனம்?
Story first published: Tuesday, September 20, 2022, 7:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X