4000 ஊழியர்களை பணிநீக்கம்.. திட்டம்போடும் டிஸ்னி..!

உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சேவை நிறுவனமான டிஸ்னி உயர்மட்ட நிர்வாகம் சமீபத்தில் மாறிய நிலையில், பொழுதுபோக்கு சேவை துறையில் பெரும் மாற்றம் உருவாகியுள்ள நிலையிலும் செலவுகளை குறைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது டிஸ்னி.

இந்த நிலையில் அடுத்த சில வாரத்தில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள டிஸ்னி தனது மேனேஜர்களிடம் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் டிஸ்னி நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்க துவங்கியுள்ளது.

டிஸ்னி இந்த பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 4000 ஊழியர்களை வெளியேறே்ற உள்ளது. இந்த 4000 ஊழியர்களை மொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவார்களா அல்லது பகுதி பகுதியாக பணிநீக்கம் செய்யப்படுவார்களா என்பது தான் முக்கியமான கேள்வி.

மெட்டா பணிநீக்கம்

மெட்டா பணிநீக்கம்

சமீபத்தில் உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களான மெட்டா சுமார் 10000 ஊழியர்களை 2வது ரவுண்ட் பணிநீக்க திட்டத்தை மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டு உள்ளார், இந்த நிலையில் தற்போது டிஸ்னி 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 3 - வருடாந்திர கூட்டம்

ஏப்ரல் 3 - வருடாந்திர கூட்டம்

டிஸ்னி நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இந்த பணிநீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது டிஸ்னி general entertainment பிரிவில் முதலீடுகள் மற்றும் கவனத்தை திருப்பி, காம்கேஸ்ட் உடனான கூட்டணியில் இயங்கும் HULU ஸ்ட்ரீமிங் தளத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது.

டிஸ்னி+

டிஸ்னி+

டிஸ்னி நிறுவனத்தின் சொந்த ஸ்ட்ரீமிங் சேவை தளமான டிஸ்னி+ -ல் முதல் முறையாக வாடிக்கையாளர் எண்ணிக்கை 1 சதவீதம் குறைந்து 161.8 மில்லியனாக உள்ளது. பிப்ரவரி மாதம் டிஸ்னி சிஇஓ Bob Iger பிப்ரவரி மாதம் 7000 ஊழியர்கள் இந்த வருடம் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

இந்திய சந்தை

இந்திய சந்தை

டிஸ்னிக்கு முக்கிய வர்த்தக தளமாக இந்தியா இருக்கும் வேளையில், ஐபிஎல் போன்ற முக்கியமான விளையாட்டு போட்டிகளின் பிராட்காஸ்டிங் ஏலத்தில் தோல்வி அடைந்த காரணத்தால், இனி வரும் காலத்தில் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். இதேபோல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் HBO கன்டென்ட்-க்கான திட்டத்தை ரினீவ் செய்ய தவறியுள்ளது.

7000 ஊழியர்கள்

7000 ஊழியர்கள்

வாட்ல் டிஸ்னி நிர்வாகம் இந்த 7000 ஊழியர்கள் பணிநீக்கத்தின் மூலம் சுமார் 5.5 பில்லியன் டாலர் அளவிலான செலவுகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் ஸ்ட்ரீமிங் வர்த்தகமும் லாபகரமானதாக மாற்ற முடியும் என வாட்ல் டிஸ்னி நிர்வாகம் நம்புகிறது.

பாப் இகர்

பாப் இகர்

வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து 2020 ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார் பாப் இகர். பிப்ரவரி 2020 இல் பாப் இகர் ஓய்வு பெற்ற நிலையில் டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற பாப் சாபெக் நியமிக்கப்பட்டர். பாப் சாபெக் நிர்வாகத்தின் கீழ் வால்ட் டிஸ்னி ஸ்ட்ரீமிங் துறையில் அதிகப்படியான முதலீடு செய்தும் பெரிய அளவிலான வர்த்தகத்தை ஒவ்வொரு பிராந்தியத்திலும் சக போட்டி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டதால் டிஸ்னி நிர்வாகம் தோல்வியைச் சந்தித்தது. இதன் வாயிலாகத் தான் பாப் சாபெக் வெளியேற்றப்பட்டார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+