ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் ஆட்டம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இருந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி 50வது சதத்தை அடித்த போது டிஸ்னியின் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான Disney+ Hotstar தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது.
டிஸ்னி நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல் போட்டிக்கான ஓளிபரப்பு உரிமத்தை ஜியோசினிமா நிறுவனத்திடம் இழந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஐபிஎல் போட்டிகளைக் காண அனுமதி அளித்தது மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வேறு வழி இல்லாமல் டிஸ்னி நிறுவனமும் ஜியோசினிமா தளத்திற்குப் போட்டியாக இந்தியாவில் மொபைல் பயனர்களுக்கு ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பை போட்டிகளை இலவசமாகக் காண அனுமதி அளித்து, இதன் மூலம் ஏற்படும் இழப்பை விளம்பரங்கள் மூலம் ஈடு செய்ய முடிவு செய்தது மூலம் வாடிக்கையாளர்கள் வர்த்தகம் ஆகியவற்றை இழக்காமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்த இக்கட்டான வர்த்தகச் சூழ்நிலையில் டிஸ்னி நிறுவனம் புதிய உலகளாவிய லைவ் ஸ்ட்ரீமிங் பார்வையாளர்களை ஈர்த்து சாதனையைப் படைத்துள்ளது. விராட் கோலி 50வது சதத்தை அடித்த போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை ஒரே நேரத்தில் ஈர்த்து புதிய சாதனை படைத்தது.
இதற்கு முன்பு நவம்பர் 5 அன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியின் போது ஒரே நேரத்தில் 44 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து சாதனையைப் படைத்திருந்த டிஸ்னி நிறுவனம், இதைத் தானே முறியடித்தது இன்று 55 மில்லியன் அதாவது 5 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தில் இந்தப் புதிய சாதனை மூலம் மீண்டும் தனது ஆதிக்க நிலையை அடைந்துள்ளது.
இலவச ஒளிப்பரப்பு மூலம் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்த டிஸ்னி நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் Pro Kabaddi Leagueன் பத்தாவது சீசன் டிசம்பர் 2, 2023 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மொபைல் பயனர்களுக்கும் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications