ஒரு வர்த்தகம் அல்லது பொருள் மக்கள் மத்தியில் வேகமாக விற்பனையாக வேண்டும், அதிக வர்த்தகத்தை ஈர்க்க வேண்டும் என்றால் குறைவான விலையில் விற்பது அல்லது இலவசமாக மக்கள் கையில் கொடுப்பது இந்திய வர்த்தக சந்தையின் தாரக மந்திரம்.
இந்த இலவசம் என்ற ஆயுதத்தை சரியான முறையில் காலம் காலமாக பயன்படுத்தி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஐபிஎல் மூலம் ஜியோ சினிமா தளத்தை யாரும் எதிர்பார்க்காத உயரத்திற்கு கொண்டு சென்றது. இதில் பல கோளாறுகள் இருந்தாலும், இலவசம் என்பதால் மக்கள் இத்தளத்தை தொடர்ந்து பார்க்க துவங்கினர்.

ஜியோ சினிமா-வின் இலவசம் மற்றும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை கைப்பற்றிய காரணத்தால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரும் வாடிக்கையாளர் இழப்பை எதிர்கொண்டது. இனியும் சும்மா இருக்க கூடாது என்பதற்காக ஆசிய கோப்பை 2023 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்த முறை மொபைலில் இலவசமாக ஸ்ட்ரீம் செய்கிறது.
இந்த இலவச திட்டம் மூலம் டிஸ்னி நிறுவனம் மீண்டும் லாபம் ஈட்டும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த இலவசங்கள் மூலம் இத்தளத்தை விட்டு வெளியேறிய பழைய வாடிக்கையாளர்களையும் இணைக்க திட்டமிட்டு உள்ளது.
இந்த இலவச ஒளிபரப்புக்கு டிஸ்னி ஸ்டார் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பான்சர்ஷிப்-ஐ ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. ஆசிய கோப்பை 2023 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளின் டிவி மற்றும் டிஜிட்டல் கவரேஜ்களுக்கான ஸ்பான்சர்ஷிப்-ஐ 200 கோடி ரூபாய்க்கு FMCG நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் பெற்றுள்ளது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு அதிக பயனர்களைக் கொண்டிருந்தது, ஆனால் மார்ச் 2022 க்குப் பிறகு அதிகளவிலான யூசர்கள் வெளியேறினர், இதனால் இந்நிறுவனத்திற்கு 41.5 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜூலை வரையிலான காலாண்டில் அதிகப்படியான யூசர்களை இந்தது டிஸ்னி நிறுவனம்.
தற்போது இலவசமாக ஆசிய கோப்பை 2023 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை மொபைல் செயலியில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் திட்டம் மூலம் மீண்டும் லாபத்தை அடைய முடிவு உள்ளது.


Click it and Unblock the Notifications