ஸ்கொயர் ஸ்பேஸ் நிறுவனத்தின் சீப் மார்க்கெட்டிங் அதிகாரியான கின்ஜில் மாதுர், வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையுடன் கூடிய வேலை கிடைப்பது இன்றைய சூழலில் மிகவும் கடினம் என்றாலும், இளைஞர்கள் எந்த வேலையையும் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் எந்த சம்பளத்திற்காக வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Fortune இதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், கின்ஜில் மாதுர் இளைஞர்கள் எந்த வேலையாக இருந்தாலும் சரி, எத்தனை மணி நேரம் செய்யக் கூடிய வேலையாக இருந்தாலும் சரி, எந்த சம்பளத்திற்காக இருந்தாலும் சரி, வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போது நியூயார்க்கில் இருக்கும், மாதூர் ஸ்கொயர்ஸ்பேஸில் சேருவதற்கு முன்பு கான்டே நாஸ்ட், சாக்ஸ் ஃபிஃப்த் அவென்யூ மற்றும் ஃபோர்ஸ் கொயர் ஆகிய இடங்களில் தொழில்நுட்பம் மற்றும் பேஷன் துறைகளில் பணியாற்றியுள்ளார். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்பில் ஏற்பட்ட தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் .
இதுகுறித்து ஃபார்ச்சூன் நாளிதழுக்கு கூறுகையில் "நான் ஒவ்வொரு கோடைக் காலத்திலும் ஏதாவது இன்டர்ன்ஷிப்பைக் கண்டுபிடித்து படித்தேன். நான் வேலையில் சேர்ந்து அனுபவத்தை பெற விரும்பினேன்.
முதல்முறையாக நான் வேலை தேடும் போது சிலவற்றைக் கடைபிடித்தேன். அப்போதெல்லாம் அனைவரிடமும் ஒரு புத்தகம் இருக்கும். அதில் மஞ்சள் நிறத்திலான பக்கங்கள் இருக்கும். அதை திறந்து பார்த்தோமானால் உள்ளே பிசினஸ் செய்பவர்கள் பலரின் நம்பரும் இருக்கும்.
நான் அப்போது இதுபோன்ற நிறுவனங்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் இன்டர்ன்ஷிப் கிடைக்குமா? என்றும், இலவசமாக வேலை செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தேன்.
அதே போல நீங்களும் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். நான் இலவசமாக வேலை செய்யத் தயாராக இருந்தேன். அவர்களுக்குத் தேவையான எந்த நேரமும் வேலை செய்யத் தயாராக இருந்தேன். மாலை மற்றும் வார இறுதி நாட்களிலும் கூட வேலை செய்யத் தயாராக இருந்தேன்.
நான் வார இறுதி நாட்களில் பயணம் செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. எனவே நீங்களும் எத்தனை மணி நேரம் செய்யக் கூடிய வேலையாக இருந்தாலும் சரி, எந்த சம்பளத்திற்காக இருந்தாலும் சரி, வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாதுரின் வார்த்தைகளுக்கு ஆன்லைன் பயனர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கின்ஜில் மாதுரின் கருத்துக்கள் இளைஞர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும் நிலையில், அவர்களின் கருத்துக்கள் சிலருக்கு உத்வேகம் அளித்தாலும், பெரும்பாலானோருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது. இந்த விவாதம் வேலைவாய்ப்பு சூழல் குறித்தும், இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பரந்த அளவிலான விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications