சில சமயங்களில் நாம் படிக்கும் படிப்பு ஒன்றாகவும் நாம் செய்யக்கூடிய வேலை அதற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒன்றாகவும் இருக்கும். 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கும் போது ஒரு கனவினை மனதில் வைத்துக் கொண்டுதான் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் பட்டப் படிப்பை தேர்ந்தெடுப்போம்.
ஆனால் அந்த படிப்பை முடித்த பிறகு சிலருக்கு படித்த வேலைக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பலருக்கு அப்படி கிடைக்காது . ஆனால் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தவர்களும் இருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருக்கும் பலரும் இப்படி வந்து தான் பெரிய அளவில் உயர்ந்து நிற்கிறார்கள்.

சந்திரசேகரன்: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன். என். சந்திரசேகரன் என அறியப்படும் அவர் தமிழ்நாட்டில் தமிழ் மீடியத்தில் அரசு பள்ளியில் படித்தவர். அவர்தான் தற்போது நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
மோகனூரில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் பள்ளி படிப்பை முடித்தார். இதனை அடுத்து கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் அப்ளைடு சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்த அவர் என்ஐடி திருச்சிராப்பள்ளியில் எம்சிஏ பட்டப்படிப்பை முடித்தார். ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் எல்லாம் இவர் படிக்கவில்லை தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் மட்டுமே தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
கிரன் மசூம்தர் ஷா : பெங்களூரு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தார் . இதனை அடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவர் பெலாரட் கல்லூரியில் Master of brewery படித்து முடித்தார் . தாயகம் திரும்பிய அவர் பயோ டெக்னாலஜி பிரிவில் பயோகான் நிறுவனத்தை தொடங்கினார். அவரது ஸமார்ட்டான முடிவுகள் நாட்டின் முன்னணி நிறுவனமாக பயோகானை வளர்க்க உதவி செய்திருக்கிறது.

சஞ்சீவ் மேத்தா : ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இவர் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படிப்பை முடித்தவர். ஹிந்துஸ்தான் யுனிலிவரின் பல்வேறு பிரிவுகளில் படிப்பை முடித்த அவர் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இதனை அடுத்து தான் அவருக்கு ஹிந்துஸ்தான் யுனிலிவர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு கிடைத்தது.
உதய் கோடக்: கோடக் மகேந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரியான உதய் கோடக். காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர் பின்னர் ஜம்னலால் பஜாஜ் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை படிப்பை படித்தார் .1985 ஆம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் முதலீட்டில் கோடக் மகேந்திரா வங்கியை தொடங்கி தற்போது இந்தியாவின் முன்னணி தனியார் நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதனை உருவாக்கி இருக்கிறார்.
ராஜேஷ் கோபிநாதன்: டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான இவர் . என்ஐடி திருச்சிராப்பள்ளியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்தார். இதனை அடுத்து மேலாண்மை பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பை முடித்தார். தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவரான இவர் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தை வழி நடத்தும் வாய்ப்பை பெற்றவர்.
நாம் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று இல்லை, அரசு பள்ளியில் படித்தாலும் சாதாரண பட்டப்படிப்பை முடித்தாலுமே கூட கடின உழைப்பாலும் திறமையாலும் ஸ்மார்ட்டான முடிவுகளாலும் பெரிய இடத்தை அடைய முடியும் என்பதை இவர்களின் வெற்றி உணர்த்துகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications