Divi's Lab கடந்த சனிக்கிழமையன்று அதன் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 80.61% நிகர லாபம் கண்ட 492.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமே விற்பனை அதிகரிப்பு தான் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 272.44 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்ததாகவும் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதே இந்த நிறுவனத்தின் விற்பனையானது 49% அதிகரித்து 1,730 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே எபிடா கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 78% அதிகரித்து 7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதுவரை இல்லாத அளவு விற்பனை
இந்த நிறுவனம் இதுவரை இல்லாத அளவு விற்பனையை கண்டுள்ளதாகவும், எபிடா, பேட் என அனைத்தும் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த செயல்திறனும் வேறுபட்ட மருந்துகளால் வழி நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கொரோனா தொடர்பான எந்த மருந்தும் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வருவாய் அதிகரிக்கும்
இதன் முக்கிய வணிக நன்மையானது 2022ல் பெறத் தொடங்கும் என்றும், இது முன்னோக்கி செல்லும் வருவாய் பாதையை மேலும் முன்னோக்கி செலுத்தும் மோதிலால் ஆஸ்வால் தனது முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேவை அதிகரிப்பே காரணம்
நாங்கள் 2021ம் நிதியாண்டில் 16% வருவாய் அதிகரிப்பும், 2022ம் நிதியாண்டில் 13% வருவாய் வளர்ச்சியும் பெறுவோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. காரணம் இந்த நிறுவனத்தின் தேவையானது அதிகரித்துள்ளதே என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இது இந்த நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் அதிகரிக்க காரணமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய பங்கு விலை
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது காலையில் 18.2% ஏற்றம் கண்ட நிலையில், முடிவில் கிட்டதட்ட 12% ஏற்றத்துடனும் முடிவடைந்துள்ளது.
இன்றைய சந்தை நிலவரப்படி Divis Laboratories Ltd பங்கு விலையானது 332.85 ரூபாய் அதிகரித்து, 3,117.10 ரூபாயாக பிஎஸ் இயில் முடிவடைந்துள்ளது. இதே என் எஸ் இயிலும் கிட்டதட்ட 12% ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. அதில் பங்கு விலையானது 332.95 ரூபாய் அதிகரித்து, 3,117.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications