மும்பை: இந்திய மருந்து நிறுவனமான டிவிஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டியுள்ளது.
அதுமட்டும் அல்ல, இந்தாண்டு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இதுவரையில் இந்த பங்கின் விலையானது 103% ஏற்றம் கண்டுள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அதன் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. முந்தைய நாள் முடிவு விலையுடன் ஒப்பிடும்போது 3% ஏற்றம் கண்டு, 3,832 ரூபாயினை தொட்டுள்ளது. இதன் சந்தை மூலதனமும் 1.01 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
நல்ல ஏற்றம் காணலாம்
டிவிஸ் நிறுவனம் மட்டும் அல்ல, மற்ற பார்மா நிறுவனங்களும் சற்று ஏற்றத்தினை கண்டுள்ளன. குறிப்பாக சன் பார்மாவும் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது. டிவிஸ் நிறுவனம் அதன் விரிவாக்க பணிகள் மூலம் நல்ல வருவாயினை காணலாம் என்றும் எதிர்பார்க்கின்றது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள், இந்த மருந்து பங்கானது நல்ல ஏற்றம் காணலாம் என்றும் கணித்துள்ளனர்.
வலுவான தேவை
இதன் காரணமாக இந்த மருத்துவ பங்கில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. அதோடு இந்த நிறுவனத்தின் API-க்கு வலுவான தேவை உள்ளதும் இந்த பங்கு ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. மேலும் இதன் விரிவாக்க பணிகள் 2021ம் ஆண்டில் நிறையவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 2022ம் ஆண்டு முதல் இதன் திறன் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றத்திற்கு பல காரணங்கள்
மேலும் API-க்கு உள்ள வலுவான தேவை, விரிவாக்க திறன் மற்றும் வளர்ந்து வரும் சந்தை உள்ளிட்ட பல காரணிகளினால் ஏற்படும் நன்மையை டிவிஸ் லேப் விரைவில் அறுவடை செய்யத் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த நிறுவனம், வலுவான வருவாய், கடன் இன்மை, நல்ல லாபம் என இதன் தரம் அதிகரித்துக் கொண்டே செல்லலாம் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் உணர்வுகள் எழுந்துள்ளன.
பங்கு இலக்கு விலை
இதற்கிடையில் நிபுணர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு விலையின் இலக்கினை உயர்த்தியுள்ளன. சமீபத்தில் முன்னணி புரோக்கிங் நிறுவனம் ஒன்று அதன் இலக்கு விலையை 4175 ரூபாயாக நிர்ணயித்தது.
இந்த நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு மத்தியில் ஐரோப்பிய பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் அதிகரித்து வருவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உண்மையில் இது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான். இந்தியாவினை பொறுத்தவரையில் மருத்துவ பங்குகளுக்கு என்றுமே முதலீட்டாளர்களிடத்தில் தனி இடம் உண்டு. அந்த வகையில் டிவிஸ் லேப் பங்கிற்கும் நல்ல வாய்ப்புண்டு என்பது மறுப்பதற்கில்லை.


Click it and Unblock the Notifications