உலகளவில் விவாகரத்து விகிதத்தை ஒப்பிடும் போது இந்தியாவில் வெறும் 1 சதவீதம் மட்டுமே இருக்கிறது. விவாகரத்து மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அதிகளவில் சமுகத்தில் பேசப்பட்டு உள்ளது, ஆனால் ஆண்களுக்கு ஏற்படும் நிதி தாக்கம் குறித்து இதுவரையில் வெளிச்சத்திற்கு வராத விஷயமாகவே உள்ளது.
ஃபைனான்ஸ் மேகசின் நடத்திய ஆய்வில் 1,248 பேரிடமிருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில், விவாகரத்து பெற்ற 42 சதவீத ஆண்கள், அவர்களின் முன்னாள் மனைவிக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சம் தொகையை செலுத்தவும் அல்லது விவாகரத்து செயல்பாட்டுக்கான சட்டச் செலவுகளுக்காகவும் கடன் வாங்கியுள்ளனர்.

இவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (49 சதவீதம்) ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி செலவழித்துள்ளனர். இதேவேளையில் பெண்களை பார்க்கும்போது 19 சதவீதம் பேர் தான் கடன் வாங்கி செலவு செய்துள்ளனர். இது விவாகரத்து மூலம் ஏற்படும் வலியைத் தாண்டி, ஆண்களும், பெண்களும் நிதி நெருக்கடியில் தள்ளப்படுவதை காட்டுகிறது.
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவரா நீங்க? முதல்ல இதை படிங்க
கடன் சுமை: இந்த ஆய்வின்படி, 42 சதவீத ஆண்கள் விவாகரத்து செலவுகளை சமாளிக்க கடன் பெற்றுள்ளனர். நீண்ட சட்டப் போராட்டங்கள், வழக்கறிஞர் கட்டணங்கள் மற்றும் அதீத ஜீவனாம்சம் ஆகியவை ஆண்களை அதீத வட்டி கொண்ட கடன்களில் சிக்க வைக்கின்றன.

சொத்துமதிப்பில் சரிவு: இதேபோல் விவாகரத்துக்குப் பிறகு 29 சதவீத ஆண்களின் சொத்துமதிப்பில் பெரும் சரிவு ஏற்படுகிறது, அதாவது நெகட்டிவ் நெட் வொர்த் அளவீட்டை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிக வருமானம் கொண்டவர்களிடம் இது அதிகம் காணப்படுகிறது, ஏனெனில் விவாகரத்து மூலம் சொத்தில் ஒரு பகுதி பெண்களின் நிதி பாதுக்காப்புக்காக அளிக்கப்படுகிறது.
விவாகரத்து செயல்முறையில் பொதுவாகா பெண்களின் நிதி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும், இதேவேளையில் ஆண்களுக்கு பெரும் நிதி சுமையில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த விவாகரத்து விகிதம் குறைவாக இருந்தாலும், நகரங்களில் தொடர்ந்து 30-40 சதவீத உயர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications