இதெல்லாம் நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள், பாரம்பரியம் பழக்க வழக்கங்கள் இன்றும் இருந்து கொண்டு தான் உள்ளன.

மக்களின் முக அமைப்பு, மொழி, உணவு, உடை, இசை, நடனம் என எல்லாமே வித்தியாசப்படும். மேற்கண்ட அனைத்தும் மக்களிடையே வித்தியாசப்பட்டாலும், கலாச்சாரம் அவர்களை ஒன்றாக இணைக்கிறது. ஆனால் இது எல்லோரிடத்திலும் ஊறியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ? நம்மவர்கள் முதலீடு செய்யும் போது கூட, அங்கும் ஒரு நடைமுறையை தொடருகின்றனர்.

முதலீடு செய்ய ஆர்வம்
 

முதலீடு செய்ய ஆர்வம்

உதாரணத்திற்கு தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா, தீபாவளி, தந்தேராஸுடன் ஆரம்பமாகிறது. இந்த திருநாளில் தான் லட்சுமி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யப்படும். மக்கள் தங்கள் வீட்டில் செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று இந்த நாளில் பூஜை செய்வார்கள். இந்த நாளில் பெரும்பாலான மக்கள் தங்கத்திலோ அல்லது வேறு ஏதேனும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.

நல்ல லாபம் கிடைக்கும்

நல்ல லாபம் கிடைக்கும்

ஏனெனில் இந்த பூஜையை நாம் செய்யும் போது நமக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆக இந்த நாளில் லாபம் கிடைத்தால், அந்த வருடம் முழுவதும் லாபகரமான வருடமாக இருக்கும் என்றும் கூறுவார்கள். இதனால் தான் இந்திய பங்கு சந்தை மற்றும் கமாடிட்டி வர்த்தகத்தில் கூட மூகூர்த் டிரேங்க் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டு தோறும் இந்திய பங்கு சந்தைகளிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் நடைபெற்று வரும் ஒரு சிறப்பு வர்த்தக நாளாகும். இதனால் மற்ற நாட்களில் வர்த்தகம் செய்வதை விட, இந்த நாளில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சந்தைக்கு சாதகமான காரணங்கள்

சந்தைக்கு சாதகமான காரணங்கள்

இந்த நிலையில் சந்தையில் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல சாதகமான அறிவிப்புகளால், சந்தை ஏற்றத்தினை காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த பல மாதங்களாக லாக்டவுன் காரணமாக தற்போது தான் செயல்பட ஆரம்பித்துள்ளன. உதாரணத்திற்கு தியேட்டர்கள், ஆக இது போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு பரிந்துரை
 

பங்கு பரிந்துரை

இதற்கிடையில் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் சில பங்குகளை பரிந்துரைத்துள்ளது.

ஆட்டோமொபைல் துறை

Endurance Technologies - cmp: ரூ.1,052, இலக்கு விலை ரூ.1,297

Swaraj Engines - cmp:ரூ.1,382, இலக்கு விலை ரூ.1,891

நிதித்துறை

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் நிறுவனம்(> Cholamandalam Inv) - cmp: ரூ307, இலக்கு விலை ரூ.362

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் (IDFC First Bank) - cmp:ரூ.31, இலக்கு விலை ரூ.36

கெமிக்கல்ஸ்

அதுல் லிமிடெட் (Atul Ltd ) - CMP:ரூ.6,100 இலக்கு விலை ரூ.7,339

Galaxy Surfactants - CMP:ரூ.1,785 இலக்கு விலை ரூ.2,075

தகவல் தொழில்நுட்ப துறை

Persistent Systems - CMP: ரூ.1,147 இலக்கு விலை ரூ.1,531

பார்மா & ஹெல்த்கேர்

மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் (Metropolis Healthcare) - CMP: ரூ.1,968, இலக்கு விலை ரூ.2,360

மற்றவை

ஹவ்கின்ஸ் ( Hawkins cooker) - CMP: ரூ.5,124, இலக்கு விலை ரூ.5,992

ஐனான்ஸ் லெயிசர் ( Inox Leisure ) - CMP: ரூ.276, இலக்கு விலை ரூ.350

ஜேகே லஷ்மி சிமெண்ட் ( JK Laxmi cement) - CMP: ரூ.292, இலக்கு விலை ரூ.355

விஐபி இண்டஸ்ட்ரீஸ் ( VIP Industries ) - CMP : ரூ.286, இலக்கு விலை ரூ.375

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali 2020: top stocks recommendations for diwali Diwali 2020: top stocks recommendations for diwali

Market update.. According to the angel brokin report, Here we listed top sector shares to buy for diwali 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?