இந்தியாவில் 99 சதவீத நடுத்தர குடும்பங்களின் முக்கிய வாழ்நாள் கனவுகளில் ஒன்று சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது தான், இன்று மாத சம்பளக்காரர்களுக்கு வங்கிகள் வாரி வழங்கும் வீட்டு கடன் மூலம் எளிதாக நடந்துவிடுகிறது. இப்படி சொந்த வீடு வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக தீபாவளி பண்டிகை வந்துள்ளது.
தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் பண்டிகை ஆஃபர்களும் வந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையின் போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கார், பைக்களுக்கு தள்ளுபடி ஆஃபர் அளிப்பது போலவே ரியல் எஸ்டேட் துறையிலும் அதிகப்படியான தள்ளுபடி, ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதை மேலும் எளிதாக வங்கிகளும் மக்கள் தங்களுடைய கனவு வீட்டை வாங்க திட்டமிடுவோருக்கு வீட்டுக் கடன் வாங்க பல சலுகைகளை அளித்து வருகிறது. இதனால் வீட்டு கடன் விண்ணப்பிக்க இதுவே சிறந்த நேரமாக தற்போது மாறியுள்ளது.
பல பெரிய வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடனைப் பெறுவதற்கு மலிவான வீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் முதல் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் எந்த வங்கிகள் என்னென்ன சலுகைகளை அளிக்கிறது என்பதை வாசகர்களுக்காக தொகுத்துள்ளோம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 8.4% இலிருந்து தொடங்குகிறது. SBI பண்டிகை கால சலுகையாக அதன் நிலையான வீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் இருந்து 0.65 சதவீதம் வரையில் கவர்ச்சிகரமான தள்ளுபடியை வழங்குகிறது. பொதுவான வீட்டு கடன் வட்டி விகிதம் 9.15 சதவீதத்தில் இருந்து துவங்குகிறது. மேலும் ஹோம் லோன், டாப் அப் லோன் ஆகியவற்றுக்கான பிராசசிங் கட்டணத்தை 50 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிக்கிறது.
HDFC வங்கி தீபாவளி பண்டிகை கால தள்ளுபடி வட்டி விகித திட்டத்திழ் கீழ் வீட்டுக் கடனுக்கான சிறப்பு வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இவ்வங்கியின் வீட்டுக் கடன்களின் நிலையான வட்டி விகிதங்கள் 8.75% முதல் தொடங்குகின்றன. தீபாவளி பண்டிகை கால சலுகையாக தற்போது வீட்டுக் கடன்களுக்கு 8.35% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை அளிக்கிறது.
இதேபோல் பஞ்சாப் நேஷ்னஸ் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஆகியவை 8.4 சதவீதத்தில் இருந்து வீட்டுக் கடன் அளிக்கிறது. இதில் பல வங்கிகள் தீபாவளி சலுகையாக கடனுக்கான பிராசசிங் கட்டணத்தை மொத்தமாக தள்ளுபடி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications