இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. பலரும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் எந்தப் பரிசை வழங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் குடும்பம், நண்பர்கள் அல்லது உங்களுக்கு நெருங்கியவர்களுக்கு சரியான பரிசை கண்டுபிடிப்பது சிலருக்கு சவாலானதாக இருக்கலாம். அதேசமயம் மாதக் கடைசியில் தீபாவளி பண்டிகை வருவதால் குறைந்த தொகையில் என்ன பரிச்சை வாங்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இந்தப் பதிவில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு 1,000 ரூபாய்க்கு கீழ் வாங்கக்கூடிய பரிசுகள் குறித்து பார்ப்போம்.
வெள்ளி நாணயம்: நீங்கள் வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கலாம். பொதுவாக பண்டிகை காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்குவது செல்வ செழிப்பிற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் வரும் தந்தேராஸ் பண்டிகையின் போது வெள்ளி நாணயத்தைப் பரிசாக வழங்கலாம்.

கிப்ட் ஹெம்பர்கள்: நீங்கள் பரிசளிக்க விரும்புவர்களுக்கு பிடித்தமான சாக்லேட்டுகள், விளக்குகள், மெழுகுவர்த்திகள் மற்றும் அவர்களுக்கு பிடித்த பிற பொருட்களையும் சேர்த்து ஒரு பையில் போட்டு அதை பரிசளிக்கலாம். இது உங்களுக்கு நெருங்கியவர்களோடு, உங்களுடைய அன்பை இன்னும் அதிகப்படுத்தும்.
இனிப்புகள் மற்றும் உலர்ந்த பழங்கள்: தீபாவளி பண்டிகை என்றாலே பலகாரங்களுக்குத்தான் நம் நாட்டு மக்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். எனவே நீங்கள் லட்டு, காஜூ கட்லி மற்றும் நெய்யால் செய்யப்பட்ட இதர பலகாரங்களை பாரம்பரிய முறையில் பரிசாக வழங்கலாம். இனிப்புகள், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உலர்ந்த பழங்களையும் வாங்கி பரிசளிக்கலாம்.
தீபாவளி பண்டிகைக்காக கிப்ட் வழங்குவதற்காகவே பல சூப்பர் மார்க்கெட்களிலும் தனித்தனியான பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு டிரை ஃப்ரூட்ஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அவற்றை வாங்கி பரிசளிக்கலாம்.
லட்சுமி மற்றும் விநாயகர் சிலை: பித்தளை, மார்பில், செராமிக் போன்றவற்றில் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் உருவம் இருக்கக்கூடிய படங்களையும் பரிசளிக்கலாம். பொதுவாகவே பண்டிகை காலங்களில் மக்கள் தெய்வத் சிலைகளை வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் வழங்க இந்த அழகான சிலைகளை பரிசளிக்கலாம்.
பட்டாசு: சுற்றுச்சூழலையும் மாசு படுத்தாமல் அதே வேளையில் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பசுமை பட்டாசுகளை வாங்கி பரிசளிக்கலாம்.
வீட்டு அலங்காரப் பொருட்கள்: வீட்டை அலங்கரிக்கக் கூடிய பொருட்களான தீபங்கள், மெழுகுவர்த்திகள், வீட்டு அலங்கார பொருட்கள், மாலைகள், மண் தீபங்கள், நவீன கண்ணாடி தீபங்கள் போன்றவற்றை தேர்வு செய்த பரிசளிக்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications