தீபாவளி பண்டிகை சில மாநிலங்களில் அக்டோபர் 31-ஆம் தேதியான நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. வங்கிகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பண்டிகை காலம் அக்டோபர் 29-ஆம் தேதி அன்று தொடங்கி நவம்பர் 3-ஆம் தேதி அன்று முடிவடைகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளும் மூடப்பட்டிருக்கும்.
ஹிந்து காலண்டரின்படி தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் சில மாநிலங்களில் தீபாவளி பண்டிகை தங்களுடைய பிராந்திய காலண்டர்களின் படி நவம்பர் 1-ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த 5 நாள் கொண்டாட்டங்களின் பொது, 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவைகளை பெற நினைக்கும் வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்ப திட்டமிட வேண்டும். ஆனால் இந்த நான்கு நாட்கள் விடுமுறையிலும் தொடர்ந்து வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
எனவே வங்கி வாடிக்கையாளர்கள் அதற்கு ஏற்ப திட்டமிட்டு உள்ளூர் விடுமுறை அட்டவணையைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அக்டோபர் 31: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை.
நவம்பர் 1: மகாராஷ்டிரா, மணிப்பூர், கர்நாடகா, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும், தீபாவளி அமாவாசை (லக்ஷ்மி பூஜை),கன்னட ராஜ்யோத்சவா மற்றும் கோவர்தன் பூஜை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 2: குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள அனைத்து வங்கிகளும் பாலி பிரதிபதா, பலிபாத்யமி, லக்ஷ்மி பூஜை, கோவர்தன் பூஜை, விக்ரம் சம்வந்த் புத்தாண்டுக்காக மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 3: அனைத்து வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும்.
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் அந்தந்த மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பிராந்திய காலண்டரின் விடுமுறை நாட்களுக்கு ஏற்ப தங்களுடைய வருகையை திட்டமிட வேண்டும். நகை மீட்பவர்கள், அடமானம் வைப்பவர்கள், இந்த நான்கு நாட்களிலும் சேவை பெற முடியாது. ஆனால் மற்ற எல்லாவித பணப் பரிவர்த்தனையும் ஆன்லைனில் செய்ய முடியும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications