கூகுள் இந்தியா ஒரு தனித்துவமான தீபாவளி ரங்கோலியை பகிர்ந்து, சமூக ஊடகங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி எல்லாம் விளம்பரப் படுத்துறாங்கன்னு பார்க்கும் அளவிற்கு ஒரு வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், தரையில் வரையப்பட்டிருக்கும் ரங்கோலியில் ஒரு QR கோட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தீபாவளிக்கு பரிசு வழங்குபவர்கள் கூகுள் பே மூலம் எளிதாக பணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வெளியான வீடியோ கிளிப்பில், கூகுள் லோகோ வண்ணங்களில் ரங்கோலி வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில் ஒரு QR கோடு கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில், ஒரு விருந்தினர், எத்னிக் உடையில், ரங்கோலியை ரசிக்கிறார். அதன் பின் ரங்கோலியில் இருக்கும் கூகுள் பே QR கோட் மூலம் ரூ. 500 செலுத்துகிறார்.

இந்த வீடியோ 23,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், கிட்டத்தட்ட 1 மில்லியன் வியூஸ்களையும் பெற்றுள்ளது. இந்த கருத்து இன்ஸ்டாகிராம் பயனர்களை கவர்ந்தது மற்றும் சிலர் தொழில்நுட்ப நிறுவனத்திடம் தங்கள் சொந்த ஆக்கப்பூர்வமான, பணம் வசூலிக்கும் தீபாவளி ரங்கோலியை எவ்வாறு உருவாக்குவது என்று கேட்டனர்.
இந்த வீடியோ பல இன்ஸ்டாகிராம் பயனர்களையும் கவர்ந்தது. சிலர் கூகுள் நிறுவனத்திடம் தங்கள் சொந்த QR கோடை வைத்து தீபாவளி ரங்கோலியை எப்படி உருவாக்குவது? என்று கேள்வி எழுப்பினர்.
ஒரு இன்ஸ்டாகிராம் பயனர்.. இதே போன்ற ரங்கோலியை எப்படி வரைவது என்று கேள்வி கேட்டுள்ளார்? அதற்கு கூகுள் இந்தியா இந்த கேள்வியையும் கூகுள் செய்யுங்கள் என்று பதிலளித்திருந்தது. மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர் QR கோடில் உள்ள "R" என்பது ரங்கோலியை குறிக்கிறது என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கும் கூகுள் இந்தியா கிண்டலாக Q என்பது "Quick Scan"-ஐ குறிக்கிறது என்று கமெண்ட் செய்திருந்தார்.
இதே போல வாசலில் கோலம் போட்டால் யாரும் என் வீட்டிற்குள் நுழையவே மாட்டார்கள் என்று இன்னொரு நபர் கருத்து தெரிவித்திருந்தார்.
கூகுள் நிறுவனத்தின் எண்ணற்ற சேவைகளை நாம் தினசரி பயன்படுத்தி வருகிறோம். அதில் கூகுள் பே அப்ளிகேஷனும் ஒன்று. கூகுள் இந்தியாவின் google pay தொடர்பான புதுமையான விளம்பரம் நவீன தொழில்நுட்பத்தின் வசதியை எளிமையான முறையில் மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. தினசரி முறையில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. பாதுகாப்பான மற்றும் வசதியான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறது. கூகுள் இந்தியாவின் இந்த புதுமையான வீடியோ "இது கூட நல்ல ஐடியாவா இருக்கே" என்று யோசிக்கும் அளவுக்கு உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications