தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் கொண்டாட காத்திருக்கும் வேளையில், இந்த பண்டிகையில் முக்கியமான வர்த்தக பொருளான இனிப்புகளில் ஒவ்வொரு ஆண்டு புதிய புதிய வகைகள் அறிமுகமாகும். அந்த வகையில் இந்த வரடும் ஜெய்பூரில் இருக்கும் ஒரு ஸ்வீட் கடை நாட்டின் மிகவும் காஸ்ட்லியான ஸ்வீட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்பு கடை, 'ஸ்வர்ண் பிரசாதம்' என்ற பெயரில் இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த இனிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இனிப்பின் விலை 1,11,000 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிரபலமான நகை கடைகள் அனைத்தும் தங்களுடைய வாடி்கையாளர்களையும், புதிய வாடிக்கையாளர்கள் கவர வேண்டும் என்பதற்காக புது புது இனிப்பு வகைகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் பல புதிய இனிப்பு வகைகள் சந்தைக்கு வந்துள்ளது, ஆனாலும் இந்தியா மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது இந்த ஸ்வர்ண் பிரசாதம் தான்.
ஸ்வர்ண் பிரசாதத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் மக்கள் சாப்பிடக்கூடிய 24 காரட் தங்கம் கலக்கப்பட்டிருப்பது தான். தங்கம் விக்கிற விலைக்கு இதெல்லாம் அநியாயம் கோபி என பலரும் புலம்புவது கேட்கிறது. சந்தையில் பல நூறு கடைகள் இருக்கும் வேளையில் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இதுப்போன்ற புதுமையை கொண்டு வர வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

இந்த இனிப்பில் தங்கத்தை தாண்டி, சில்கோசா (Chilgoza) என்ற மிகவும் விலை உயர்ந்த ட்ரை ப்ரூட் மூலம் தயாரிக்கப்படுகிறது, ஜெயின் கோவிலில் இருந்து பெறப்பட்ட தங்க வேலைப்பாடுகளும் இதில் இணைக்கப்பட்டு உள்ளது. இந்திய ஆயுர்வேத பாரம்பரியத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்வர்ண் பாஸ்மா, இனிப்பில் கலக்கப்பட்டு அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது. இந்த கலவை தான் இதற்கு ஆடம்பர பொருட்களின் பிரிவில் இடம் கிடைத்துள்ளது.
இதோடு ஸ்வர்ண் பிரசாதம் தோற்றம் மற்றும் பேக்கிங் தனி சிறப்பை பெற்றுள்ளது. இது அழகாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டியில் மக்களுக்கு விற்கப்படுகிறது.

இனிப்பு கடையின் உரிமையாளர் அஞ்ஜலி ஜெயின் இதுக்குறித்து கூறுகையில், இது இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த இனிப்பு என்று தெரிவித்தார். இதன் விலை 1,11,000 ரூபாய் என்றாலும், அதன் பிரீமியம் தோற்றம் மற்றும் பேக்கிங் அதை சந்தையில் மற்ற இனிப்பு வகைகளை காட்டிலும் தனித்துவமாக்குகின்றன என்று விளக்கினார்.
இந்த கடை, ஸ்வர்ண் பிரசாதத்தைத் தவிர, 24 காரட் தங்கம் கலந்த பிற இனிப்புகளையும் வழங்குகிறது. பிஸ்தா லோஞ்சே கிலோ 7,000 ரூபாய்க்கும், காஜு கட்லி 3,500 ரூபாய்க்கு, லட்டு 2,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications