இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி அடுத்த 2 நாட்களில் தொடங்க உள்ளன. இதனால், தேசிய பங்கு பரிவர்த்தனை (NSE) மற்றும் மும்பை பங்கு பரிவர்த்தனை (BSE) ஆகியவை அடுத்தடுத்த பொது விடுமுறைகளால் மூடப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 18, சனிக்கிழமை அன்று தனதேரஸ் என்ற விழாவுடன் உடன் தொடங்குகிறது, இந்த பண்டிகை வடஇந்தியாவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை போல் இந்த நாளில் மக்கள் தங்கம், வெள்ளியை வாங்குவது வழக்கமாக வைத்துள்ளனர். இதனாலேயே இந்தியாவில் இதன் விலை உயரும் அச்சம் உள்ளது.

தனதேரஸ் என்பது செல்வத்தின் அதிபதியான லட்சுமியின் வருகையைக் குறிக்கிறது, என்பதால் வர்த்தகத்தில் ஈடுப்பட்டு இருக்கும் அனைத்து மக்களுக்கும் இது முக்கிய பண்டிகையாக உள்ளது. ஆனால் இப்பண்டிகை தென்னிந்தியாவில் பெரிய அளவில் கொண்டப்படுவது இல்லை.
சனிக்கிழமை தனதேரஸ் வருவதால் பங்கு சந்தைகள் வாராந்திர விடுமுறை காரணமாக மூடப்பட உள்ளது. இதை தொடர்ந்து அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை.
மேலும் அக்டோபர் 20 திங்கட்கிழமை அன்று சந்தைகள் வழக்கம்போல் செயல்படும். ஆனால் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகை காரணமாக பங்குச்சந்தை விடுமுறை அளிக்கப்பட்டாலும் சிறப்பு வர்த்தகத்திற்காக மட்டும் திறக்கப்பட உள்ளது.
அக்டோபர் 21, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று தீபாவளி காரணமாக பங்கு சந்தைகள் மூடப்படும். இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல, இந்த நாளில் NSE மற்றும் BSE ஒரு மணி நேர சிறப்பு வர்த்தக அமர்வை நடத்தும், இது 'முஹூர்த்த வர்த்தகம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு செல்வத்தையும் வளர்ச்சியையும் குறிக்கும் இந்த புனித நாளில் வர்த்தகம் செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது பங்குச்சந்தை. இந்த முஹூர்த்த வர்த்தகம் காலம் காலமாக இந்திய பங்கு சந்தைகளில் செயல்முறையில் இருக்கும் ஒரு மரபாகும். தங்கம், வெள்ளியை போல் மக்கள் பங்குகளையும் முக்கிய சொத்துக்களாக பார்க்கப்படுவதால் இந்த சிறப்பு வர்த்தகம் நடத்தப்படுகிறது.
அக்டோபர் 22, 2025 (புதன்கிழமை) அன்று பலிப்ரதிபடா பண்டிகை காரணமாக NSE மற்றும் BSE மீண்டும் மூடப்படும். இந்த விடுமுறை, பங்கு பரிவர்த்தனைகளின் விடுமுறை பட்டியலின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கமாடிட்டி சந்தையான எம்சிஎக்ஸ் தளமும் தீபாவளி மற்றும் பலிப்ரதிபடா காரணமாக அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் மூடப்படும். இருப்பினும், எம்.சி.எக்ஸ். அக்டோபர் 22 அன்று மாலை வர்த்தகத்திற்கு திறக்கப்படும். மேலும், அக்டோபர் 21 அன்று முஹூர்த்த வர்த்தகத்தை நடத்துவதாக எம்சிஎக்ஸ் அறிவித்துள்ளது, ஆனால் இதற்கான நேரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தீபாவளி பண்டிகை காலத்தில், சந்தைகள் மூடப்படும் நாட்களை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முஹூர்த்த வர்த்தகம், குறுகிய நேர அமர்வாக இருந்தாலும், புதிய முதலீடுகளைத் தொடங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications