இந்தியாவில் அனைத்து முக்கிய கடை தெருக்களில் மக்கள் கூட்டம் தான், காரணம் தீபாவளி. அரசு ஊழியர்களுக்கு போனஸ், ஜிஎஸ்டி வரி குறைப்பு, அனைத்து வங்கிகளும் அளிக்கும் கடன் சேவை என அனைத்தும் இந்த ஆண்டு தீபாவளிக்கு மக்கள் ஷாப்பிங் செய்யும் சூழ்நிலையிலை ஏதுவாக மாற்றியுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலம், இந்திய சந்தைகளில் சாதனை படைக்கும் வகையில் உள்ளது. வர்த்தகர்கள் சங்கத்தின் தகவல்படி, 2025 தீபாவளி விற்பனை 5 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஆரம்பகட்டதத்தில் கணிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகம்.

போனஸ் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைர்பு மூலம் உள்நாட்டு பொருட்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மிகப்பெரிய வர்த்தகத்தை கடந்த 3 வாரங்களாக பார்த்து வரும் வேளையில், தற்போது ரீடைல் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகிறது. இதனால் பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் சிறு நகரங்களிலும் மக்கள் தீபாவளி ஷாப்பிங்-ஐ துவங்கியுள்ளனர்.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி), இந்த பண்டிகை கால விற்பனையை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது, இது ஆரம்பத்தில் கணித்த 4.75 லட்சம் கோடி ரூபாயை விட அதிகமாகும்.
CAIT அமைப்பின் தேசிய செயலர் ஜெனரல் மற்றும் சாந்தினி சவுக் உறுப்பினர் பிரவீன் காந்தல்வால் கூறுகையில், அரசின் கொள்கைகள் மற்றும் நுகர்வோரின் மாற்றமே இந்த வளர்ச்சிக்கு காரணமாக சுட்டிக்காட்டினார். டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, போபால், இந்தோர், பாட்னா, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிகப்படியான விற்பனை பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு, மண் விளக்குகள், மெழுகுவர்த்திகள், அலங்கார விளக்குகள், பாரம்பரிய உடைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், இனிப்பு, ட்ரை ப்ரூட்ஸ் போன்ற பொருட்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இதேபோல் தீபாவளி பண்டிகை அல்லாத பொருட்கள் பட்டியலில் வீட்டில் பயன்படுத்தும் எலகட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல் போன்கள் ஆகியவையும் அதிகளவில் விற்பனையாகின்றன.
இதேவேளையில் இந்தியாவில் சமீபத்தில் உருவாகியுள்ள'வோக்கல் ஃபார் லோக்கல்' முழுக்கமும் உள்நாட்டு விற்பனையை மேம்பட முக்கியமான காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications