தீபாவளி தினத்தன்று காலையில் பட்டாசு வெடிச் சத்தத்துடனும், கறி குழம்பு வாசத்துடன் எழுந்திருப்பதே தனி ஆனந்தம். இந்த ஆனந்தத்திற்காகத் தான் கோடிக் கணக்கான மக்கள் இந்தியா முழுக்க இருந்தும் சொந்த ஊருக்குப் பயணித்து வருகிறார்கள்.
தீபாவளித் திருநாளில் கறி சோறு என்பது தமிழ்நாடு மக்களின் எமோஷனாக பார்க்கும் நிலையில், தீபாவளி விற்பனைக்காக மட்டும் உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

விடிந்தால் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகியிருக்கும் வேளையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் தீபாவளி விற்பனைக்காக ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகையின் போது கறி விற்பனை பொதுவாகவே அதிகமாக இருக்கும், இதேபோல் சிறு மற்றும் குறு ஆடு வளர்க்கும் நபர்கள் இந்த தீபாவளி விற்னை மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பல விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காகப் பெரம்பலூர், சேலம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான ஹோல்சேல், ரீடைல் வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காகச் சந்தைக்குக் குவிந்த காரணத்தால் திருவிழா போலக் காட்சி அளித்தது.
தீபாவளிக்குப் பட்டாசு, புத்தாடை, பலகாரம் மட்டும் கிடையாது கறிக்கடையும் கூட்டம் அலைமோதும். தீபாவளியை முன்னிட்டு ஆடுகளுக்கான தேவை அதிகரித்ததால் ரூ.4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது. ஆடுகளைத் தாண்டி கோழி விற்பனையும் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த தீபாவளி பண்டிகையை நம்பி இந்தியாவின் ஒட்டுமொத்த ரீடைல் வியாபாரிகளும் பெரியளவிலான வர்த்தகத்தை எதிர்பார்த்து இருக்கும் வேளையில், பல துறையில் இருந்த இந்த ஆண்டு தீபாவளி வர்த்தகம் மந்தமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் குறைந்த அளவிலான விற்பனை மட்டுமே பதிவு செய்துள்ள காரணத்தால் உற்பத்தி நிறுவனங்கள் தீபாவளிக்கு பின்பு தங்களுடைய உற்பத்தி அளவுகளைக் குறைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
