PhonePe வழங்கும் பட்டாசு இன்சூரன்ஸ்! வெறும் ரூ.11-க்கு ரூ.25,000 கவரேஜ்!

தீபாவளி பண்டிகை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புதுப்புது ஆடைகளும் தான். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத விபத்துகளைக் கருத்தில் கொண்டு போன் பே "ஃபயர் கிராக்கர் இன்சூரன்ஸ்" என்று சொல்லப்படுகிற ஒரு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்தப் பதிவில் ஃபையர் கிரேக்கர் இன்சூரன்ஸ் பிரீமியம் எவ்வளவு? இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.

பிரீமியம் எவ்வளவு?: வெறும் 11 ரூபாய் முதல் இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கான பிரீமியம் தொடங்குகிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகளுக்கு ஃபையர் கிரேக்கர் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.25,000 வரையிலான கவரேஜ் கிடைக்கும் போன் பே இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை 2 பிரிவுகளாக வழங்குகிறது.

PhonePe வழங்கும் பட்டாசு இன்சூரன்ஸ்! வெறும் ரூ.11-க்கு ரூ.25,000 கவரேஜ்!

அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி அதிலிருந்து 30 நாட்கள் வரையில் வெறும் 21 ரூபாய் பிரீமியத்தில் பெறலாம். மற்றொன்று நவம்பர் 5-ஆம் தேதி தொடங்கி அதிலிருந்து 11 நாட்களுக்கான இன்சூரன்ஸ் திட்டம். இதற்கு நீங்கள் 11 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி பெறலாம்.

இந்த இரண்டில் எது உங்களுக்கு ஏற்றது என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த 2 திட்டத்திற்கும் சில விதிமுறைகளுக்குட்பட்டு காப்பீடு கிடைக்கும். 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ செலவுகளுக்காக 25,000 ரூபாய் வரை கவரேஜ் கிடைக்கும். இது இன்சூரன்ஸ் பெற்றவர், அவருடைய துணை அதாவது மனைவி அல்லது கணவன் மற்றும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளுக்கு பொருந்தும்.

அதிகபட்சமாக எவ்வளவு மருத்துவ காப்பீடு கிடைக்கும்?: அதிகபட்சமாக கிடைக்கும் மருத்துவ காப்பீடு 25,000 ரூபாய். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறிவிட முடியாது. பாலிசி பெறுவதற்கு முன்பு கிளைம் விதிமுறைகள், ஆவண விவரங்கள் என்னென்ன என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அதேபோல கிளைம் கோரிக்கைக்கு தேவைப்படும் விவரங்கள், எந்த விபத்துகளுக்கு இந்த தொகை பொருந்தும், எந்த தேதியில் காப்பீடு பெறுகிறீர்கள்? அதிலிருந்து எவ்வளவு நாட்கள் கவரேஜ் கிடைக்கும்? என்ற விபரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு பாலிசி பெறுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+