தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்!! பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்!!

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி வருவதால் இந்த ஆண்டு திரளான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

தீபாவளியை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது. ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. இதன் படி நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி. இருந்தாலும் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலை தவிர்க்க நவம்பர் 5ஆம் தேதி இரவு அதாவது வியாழக்கிழமை இரவே சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள்.

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்!! பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட அப்டேட்!!

அந்த வகையில் நவம்பர் 5ஆம் தேதி அன்று சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு நாளை அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அதே போல நவம்பர் 6ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை சென்ளை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புறப்பட விரும்புவோர், வரும் 7ஆம் தேதி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு நாளை முதல் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். அதேபோல் மறுமார்க்கத்தில் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்வோர் வரும் 9ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Also Read

தீபாவளி முடிந்து மறுதினமே பணிக்கு செல்வோர். தீபாவளி தினமான நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே புறப்பட வேண்டும். அதற்கு வரும் 9ஆம் தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க சிலர் திங்கள் அன்று ஊர்களுக்கு செல்வார்கள். அதாவது நவம்பர் 9ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு செல்வோர். வருகிற 10ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால், முக்கிய ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே டிக்கெட் தீர்ந்து போக வாய்ப்புள்ளது.

Recommended For You

எனவே நீங்கள் ரயிலில் செல்லும் திட்டம் இருந்தால் இன்றைய தினம் உங்களின் ஐஆர்சிடிசி கணக்கில் பயணிகள் விவரங்களை உள்ளிட்டு சேமித்து வைத்து கொள்ளுங்கள். அதே போல பணத்தை வாலெட்டில் போட்டு வைப்பதும் நல்லது. காலை 8 மணிக்கு சில நிமிடங்கள் முன்னதாகவே லாகின் செய்து டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்வோர் ரயில்கள் முக்கியமான போக்குவரத்து என்பதால் அந்த பாதையில் டிக்கெட் விரைவில் நிரம்பி விடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+