தீபாவளி நெருங்க நெருங்க வீட்டில் கொண்டாட்டம் அதிகரித்தாலும் குடும்பத் தலைவன் மற்றும் தலைவிக்கும் தான் கொண்டாட்டத்திற்குப் பின்னால் இருக்கும் வலி புரியும். தீபாவளி வந்துவிட்டாலே ஆடை, பட்டாசு, உணவு, உறவினர்கள் வருகை, பயணம் எனப் பெரிய செலவுகள் வந்துவிடும். இதைச் சமாளிப்பது என்பது பெரிய தலைவலி தான்.
பண நெருக்கடி வரும் போது பலருக்கும் டக்கென உதவுவது, குறிப்பாக மாத சம்பளக்காரர்களுக்கு உதவுவது பர்சனல் லோன் தான். இதற்காகவே வங்கிகள் அனைத்தும் பெரும் தொகையைத் திரட்டி பணமாகக் கடன் அளிப்பதில் துவங்கி ஷாப்பிங் வரையில் பல கடன்களை அளிக்கத் தயாராக உள்ளது.

பொருட்களை வாங்க வேண்டுமெனில் கன்ஸ்யூமர் லோன் இருக்கு எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க ஒரே தீர்வு பர்சனல் லோன் தான், எப்போதும் வங்கிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவது தான் சரியான முடிவு. எளிதாகப் பணம் கிடைக்கிறது எனக் கந்து வட்டிக்குக் கடன் வாங்குவது மூலம் அதிகப்படியான பணத்தை வட்டி செலுத்துவதில் இழக்கலாம். எனவே சிந்தித்துச் செயல்படுங்கள்.
நீங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வாங்கினாலும் சில முக்கியமான விஷயத்தை வங்கி அதிகாரிகளிடம் முன்கூட்டியே கேட்டு வாங்குவது அவசியம். அப்படி வங்கிகளிடம் கட்டாயம் கேட்க வேண்டிய முக்கியக் கேள்விகள் இதோ..
வட்டி விகிதம்: நாங்கள் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி..?, இந்த வட்டி நிலையானதா அல்லது மாறக்கூடியதா..?, கடன் வாங்கிய பின்பு வட்டி விகிதம் உயருமா..?
ஆகிய கேள்விகளைக் கட்டாயம் கேட்க வேண்டும். இதற்கு முன்பு எந்த வங்கியில் குறைவான வட்டியில் பர்சனல் லோன் கிடைக்கிறது என்பதையும் தெரிந்துகொண்டு அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்.
கடன் காலம் : வங்கியைத் தேர்வு செய்த பின்பு நீங்கள் வாங்கும் கடனுக்கு அதிகப்படியான காலம் என்ன, குறைவான கடன் காலம் என்ன என்பதைக் கட்டாயம் கேளுங்கள். இந்த ஒரு விஷயம் தான் உங்களின் தவணை தொகையின் அளவை தீர்மானிக்கும்.
மேலும் கடன் தொகையை முன்கூட்டியே செலுத்துவதில் கட்டணம் உள்ளதா..?, தவணை தொகையைத் தாமதமாகச் செலுத்தினால் அபராதம் எவ்வளவு..? முன்கூட்டியே கடன் செலுத்தும் வழிமுறைகள் என்ன..? இதை ஆன்லைனில் செலுத்துவதா அல்லது வங்கி கிளைக்குத் தான் செல்ல வேண்டுமா என்பதையும் கேட்டுவிடுங்க.
கட்டணம் : வங்கிகள் அளிக்கும் அனைத்து கடன்களும் ஒரு கட்டணத்தை வசூலிக்கும். இதன் படி பர்சனல் லோன்-க்குப் பிராசசிங் கட்டணம் என்ற ஒரு விஷயம் உள்ளது. இந்தப் பிராசசிங் கட்டணம் பொதுவாகக் கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நிலையாக வசூலிக்கப்படும், சில வங்கிகள் வசதிக்கு ஏற்ப 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் எனக் கடன் தொகைக்கு ஏற்றார்போல் வசூலிக்கும்.
எனவே நீங்கள் வாங்கும் கடனுக்குப் பிராசசிங் கட்டணம் எவ்வளவு என்பதைக் கேட்பது மட்டும் அல்லாமல் hidden charges ஏதேனும் உள்ளதா என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
தவணை தொகை : நீங்கள் மேலே கொடுக்கப்பட்ட கேள்வியின் அடிப்படையில் தான் உங்களின் பர்சனல் லோன்-க்கான ஈஎம்ஐ கணக்கிடப்படும். ஆனாலும் இந்த ஈஎம்ஐ கால்குலேட்டர் பயன்படுத்தி டபுள் செக் செய்துகொள்ளுங்கள்.
தகுதி : பர்சனல் லோன் வாங்குவதற்கு மாத சம்பளக்காரர்களாக இருந்தாலே போதும் எனப் பலரும் கூறுவது உண்டு. இது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும் வங்கிகள் உங்களின் வயது, சிபில் ஸ்கோர், வருமானத்தின் அளவு, ஏற்கனவே வைத்துள்ள கடன்கள் ஆகியவற்றைக் கட்டாயம் செக் செய்யும். இதன் அடிப்படையில் கடன் அளவு, வட்டி விகிதம் ஆகியவை மாறுபடலாம்.
செக்யூரிட்டி : வீட்டுக் கடன், நகைக் கடன் போல் அல்லாமல் பர்சனல் லோன் வாங்குவதற்கு எவ்விதமான பிணை தேவையில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications