தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் வரவிருக்கும் போனஸ் குறித்து உற்சாகமாக உள்ளனர். பொதுவாக போனஸ் வருகின்றது என்றாலே, அது வருவதற்கு முன்பே, பல திட்டங்களை போட்டு வைத்திருக்கலாம். பலரும் பல கவர்ச்சிகரமான ஷாப்பிங் திட்டங்களை போட்டு வைத்திருக்கலாம்.
எனினும் தீபாவளி போனஸை முன் கூட்டியே திறம்பட திட்டமிடுவது முக்கியமாகும்.
இதன் மூலம் உங்களது போனஸினை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும். இது உங்களது நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும். அதெல்லாம் சரி எதில் முதலீடு செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
லெமன் ட்ரீ
லெமன் ட்ரீ வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் வாங்கி வைக்க நல்ல பங்குகளில் ஒன்றாகும். இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக்கால பருவத்தில் போக்குவரத்து தேவையானது அதிகரிக்கலாம். இதற்கிடையில் இந்த பங்கினை 91.45 ரூபாய் என்ற லெவலில் வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை மீடியம் டெர்மில் 109 ரூபாயாகும்.
டாடா கெமிக்கல்ஸ்
டாடா கெமிக்கல் பங்கின் விலையும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஃபண்டமெண்டல் காரணிகள் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றன. இப்பங்கின் விலையானது 1206 ரூபாய்க்கு மேலாக முடிவடைந்தால், அடுத்ததாக நடுத்தர காலத்தில் 1604 ரூபாய் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடனை அடையுங்கள்
இது தவிர நிபுணர்கள் உங்களுக்கு கிடைக்கும் போனஸை இந்த காலகட்டத்தில் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என நிலுவையில் ஏதேனும் கடன் இருந்தால் அதனை செலுத்தலாம். இது உங்களின் நிதிச் சுமையை குறைக்கும். ஆக கடனை அடைப்பது ஒரு சிறந்த ஆப்சனாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எதில் எல்லாம் முதலீடு செய்யலாம்
கடன் இல்லையெனில் உங்களது போனஸ் தொகையினை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அல்லது சிறந்த பங்குகளை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்யலாம்.
தங்கமாக கூட வாங்கி வைக்கலாம். பெரும்பாலான நடுத்தர குடும்பங்களில் இன்றும் செய்யும் முதல் வேலை, போனஸ் வாங்கிய கையோடு நகைகளை வாங்கி விடுவர்.
இதனையும் கொஞ்சம் யோசிக்கலாம்
உங்களது அவசர தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து வைக்கலாம். இன்சூரன்ஸ்கள் அல்லது ரியால்டிகளில் வாய்ப்பிருந்தால் செய்து வைக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் உங்களது முதலீட்டின் மூலம் நீங்கள் ஏதேனும் கற்றுக் கொள்ளக் கூடிய முக்கிய விஷயங்களாக இருக்கலாம். உதாரணத்திற்கு குறுகிய கால முக்கிய கோர்ஸ்கள், பயனுள்ள லேப்டாப் என வாங்கி வைக்கலாம்.
ஆக மேற்கண்ட விஷயங்களில் உங்களுக்கு ஏற்ற பயனுள்ள ஒன்றை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications