தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே வேலைக்கு செல்லக்கூடிய அனைவரும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு விஷயம் தீபாவளி போனஸ். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி போனஸ் வழங்குவது வழக்கம்.

தீபாவளி பண்டிகையின் போது ஊழியர்கள் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் அதனை கொண்டாட வேண்டும் புது துணி உள்ளிட்டவற்றை வாங்கி மகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த போனஸ் என்பது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

இதன்படி அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்திய நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இவர்களின் உழைப்பின் பலனாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை மட்டும் எட்டவில்லை அந்நிய முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது எனக் கூறியிருக்கிறார்.

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.3 % மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் கிடைக்கும் .

அதே வேளையில் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார். வீட்டு வசதி மற்றும் குடிநீர் வாரிய தொழிலாளர்கள் இந்த பிரிவின் கீழ் வருவார்கள். தற்காலிக அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் தகுதியுள்ள தமிழ்நாடு அரசின் நிரந்தர ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 8400 ரூபாய் முதல் 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும். மொத்தம் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு 376 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+