சுதந்திர இந்தியாவுக்கு முன்பில் இருந்தே விவசாயம், தொழில் செய்பவர்கள் தங்களின் ஊழியர்களுக்கு வருடம் ஒரு முறை பண்டிகை காலத்தைக் கொண்டாட கூடுதல் சம்பளத்தை இனாம் ஆக அளிக்கப்படும் வழக்கம் இருந்தது.
ஆனால் இந்தக் கூடுதல் சம்பளம் அல்லது இனாம் தொகையை ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு காலகட்டத்தில் கொடுக்கப்பட்டது, உதாரணமாகப் பொங்கல், தசரா போன்ற பண்டிகை காலகட்டத்தில் அளிக்கப்பட்டது.
ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் இது பெரும் மாற்றத்தைச் சந்தித்தது.
பிரிட்டிஷ் ஆட்சி
இந்தியாவில் நிறுவனங்கள், அமைப்புகள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையில் வார சம்பளமாக அளிக்கப்பட்டது. இந்தியா முழுக்க இருக்கும் டெக்ஸ்டைல் மில் மற்றும் மாவு மில்களில் வார சம்பள அடிப்படையில் தான் வழங்கப்பட்டது. இதனால் ஊழியர்கள் 52 வாரம் சம்பளம் அளிக்கப்பட்டு வந்தது.
மாத சம்பளம்
ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வந்த பின்பு அனைத்துத் துறை, தொழில்களுக்கும் மாத சம்பளம் அளிக்கப்பட்டது. இதோடு வருடத்தில் அளிக்கப்படும் பல்வேறு விடுமுறைகளைக் கணக்கில் கொண்டால் 48 வாரம் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும். இது ஆங்கிலேயருக்குப் பணத்தை மிச்சப்படுத்த பெரிய வாய்ப்பாக இருந்தது.
13 மாதம் சம்பளம்
இதை அப்படியே நடைமுறைப்படுத்த முயற்சி செய்தது. ஆனால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கத் துவங்கியது. அதாவது 52 வாரம் என்றால் 13 மாதம் சம்பளம் கிடைக்கும், இதுவே 48 வாரம் என்றால் 12 மாதம் சம்பளம் மட்டுமே. ஒரு மாதம் சம்பளத்தைச் சாமானிய ஊழியர்கள் இழந்து வந்தனர்,
மக்கள் போராட்டம்
1930-1940 வரையில் மகாராஷ்டிரா முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின்பு ஒவ்வொரு மாதம் வீதம் 12 மாதம் சம்பளமும் 13 வது மாத சம்பளத்தைத் தீபாவளிக்கு அளிக்கப்படும் என 1940 ஜூன் மாதம் சட்டத்தை இயற்றியது. இது பின்னாளில் தீபாவளி போனஸ் ஆக மாறியது.
சுதந்திர இந்தியா
சுதந்திர இந்தியாவில் பலர் பழைய விதிகளைப் பின்பற்றாமல் ஊழியர்களுக்கு இந்த 13 மாத சம்பளம் அதாவது போனஸ் தொகையை அளிக்காமல் ஊழியர்களை ஏமாற்றியது. இதைச் சரி செய்ய இந்திய அரசு அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குமுறை நடவடிக்கையில் உட்படுத்தி, முதலாளிகள் தங்கள் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைப் போனஸாக ஊழியர்களுக்கு அளிக்க வேண்டியதைக் கட்டாயமாக்கியது.
சட்டம்
இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையை Payment of Bonus Act, 1965. என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி, நிறுவனம் தனது ஊழியர்களுக்குப் போனஸ் குறைந்தபட்ச விகிதமான 8.33% மற்றும் அதிகபட்ச விகிதம் 20% இல் செலுத்தப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications