இந்த தீபாவளிக்கு சூப்பரான பிசினஸ் ஐடியா.. குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்து செம்மையா சம்பாதிக்கலாம்!

தீபாவளி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசும், பலகாரங்களும் தான். முறுக்கு, அதிரசம், லட்டு, சீனி உருண்டை, மிச்சர் போன்ற பாரம்பரிய பலகாரங்கள் இல்லாமல் எந்த தீபாவளியும் முழுமை அடையாது. தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னரே வீட்டில் பலகாரம் செய்யத் தொடங்கி விடுவார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் பலர் நேரமின்மை மற்றும் வேலைப்பளு காரணமாக கடைகளில் பலகாரம் வாங்குவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த கலாச்சாரம் வேகம் எடுத்து வருகிறது. எனவே இந்த தேவையைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தே சிறு முதலீட்டில் தீபாவளி பலகாரங்களைச் செய்து தொழில் தொடங்கலாம். இந்த தொழிலுக்கு தேவையான முதலீடு என்ன? தயாரிப்பு செலவு எவ்வளவு?, தோராயமாக எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.

இந்த தீபாவளிக்கு சூப்பரான பிசினஸ் ஐடியா.. குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்து செம்மையா சம்பாதிக்கலாம்!

முதலீடு எவ்வளவு?: தீபாவளி பலகாரம் செய்து தொழில் தொடங்க உங்கள் வீட்டின் சமையலறையே போதும். ஆரம்பக் கட்டமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை முதலீடு செய்தால் போதுமானது. பச்சரிசி மாவு, உளுந்து, கடலை மாவு, நல்லெண்ணெய், எள்ளு, நெய் வெல்லம், சீனி, மிளகு, சீரகம், முந்திரி, திராட்சை மற்றும் இதர பொருட்களை வாங்குவதற்கு தோராயமாக ரூ.8000 முதல் ரூ.12000 வரை செலவாகலாம்.

அதைத் தொடர்ந்து பெரிய கடாய், எல்பிஜி சிலிண்டர், பலகைகள், சல்லடை, தயாரித்த பலகாரங்களை விற்பனை செய்வதற்கு பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை வாங்குவதற்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை ஆகும். இதைத் தவிர எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான செலவு ரூ.1500 முதல் ரூ.2500 வரை இருக்கும். மார்க்கெட்டிங் செய்வதற்கு பிரவுசர் மற்றும் விளம்பரச் செலவுக்கு ரூ.2000 வரை ஆகலாம்.

Also Read

மேலும் தயாரித்த பலகாரங்களை கிலோ ஒன்றுக்கு ரூ.300 தொடங்கி ரூ.500 வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் சராசரியாக 100 கிலோ பலகாரங்களை விற்பனை செய்தாலே தோராயமாக 50,000 வரை வருமானம் கிடைக்கும். இதில் தயாரிப்பு செலவு மற்றும் முதலீடு ஆகியவற்றிற்காக செலவு செய்த ரூ.20,000 முதல் ரூ.22,000 வரையிலான தொகையை நீக்கினால் நிகர லாபமாக ரூ.25,000 வரை கிடைக்கும்.

மேலும் நீங்கள் தயாரிக்கும் பலகாரங்களின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி ஆகியவற்றை பொறுத்து இதைவிட இன்னும் லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சொந்த தொழில் என்பதால் இதில் இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை யாராலும் கணித்து கூற முடியாது. ஒரு சில நேரங்களில் லாபம் இதைவிட அதிகமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் லாபம் குறைவாக இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

ஆனால் வீடுகளில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பலகாரங்கள் தரமானதாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எனவே காற்று புகாத தரமான கவர்களைப் பயன்படுத்தி உங்கள் பிராண்ட் பெயர் மற்றும் மொபைல் நம்பர் உடன் சிறிய ஸ்டிக்கர் ஒட்டி வழங்கினால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அதை வைத்தே ஆர்டர்கள் கிடைக்கும். மேலும் இரண்டு, மூன்று பலகாரங்களை சேர்த்து தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் என்று காம்போவாகவும் விற்பனை செய்யலாம். சரியான திட்டமிடலுடன் தொடங்கினால் இந்த தீபாவளியை லாபகரமானதாக மாற்றியமைக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+