தீபாவளி பண்டிகை அக்.20ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சந்தைகளிலும், கடைகளிலும் குவிந்த மக்கள், இப்போது ஆன்லைன் தளங்களை நோக்கித் திரும்பி வருகின்றனர். குறிப்பாக, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற முன்னணி தளங்களில் தீபாவளி பண்டிகையை மையப்படுத்தி துணிகள் விற்பனை இந்தாண்டு படு ஜோராக நடந்து வருகிறது.
ஆன்லைனிலும், கடைகளிலும் விற்பனை ஆனது கடந்த மாதம் முதலே அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக செல்வம் படைத்த பெரும்பாலான மக்கள் தீபாவளி ஆடைகளை முன் கூட்டியே வாங்கி வைத்து விட்டனர். சிலர் மட்டும் இன்னும் போனஸ்-க்காக கொண்டிருக்கின்றனர். அவர்கள் இனி வரும் நாட்களில் ஆடைகள் வாங்க செல்வார்கள் என்று தெரிகிறது. இதுகுறித்து கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷோரூம்களில் நமது குட்ரிட்டர்ன்ஸ் தமிழ் பெற்ற தகவலின்படி, பொதுவாக தீபாவளி நாட்களில் எங்கள் ஷோரூம்களில் அதிகப்படியான கலெக்ஷன்கள் அனைத்து வகையான பிரீமியம் பிராண்டட்கள் இருக்கும் என்றும், அதேபோன்று ஆஃபர்களும் அதிகளவில் கொடுத்து வருவதால், பொதுமக்கள் எங்கள் ஷோரூமை தேர்ந்தெடுக்கின்றனர் என்று கூறியுள்ளார். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை தீபாவளிக்கு முன்னரே சூடுபிடிக்க தொடங்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆன்லைன் விற்பனை : தமிழ்நாட்டை பொறுத்தவரை பண்டிகை நாட்களில் ஆடை வாங்குவது என்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல இ-காமர்ஸ் தளங்கள் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான ஆடைகளை தள்ளுபடி விலையில் வழங்கி வருகின்றன.
சாதாரணப் புடவைகள் முதல் பிராண்டட் ஆடைகள், ட்ரெண்டியான லெஹங்காக்கள், குழந்தைகளுக்கான அலங்கார உடைகள் வரை அனைத்துமே தற்போது ஆன்லைனில் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் இவற்றை ஆர்வத்துடன் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் : அதேபோல், வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள், கேஷ்பேக் ஆஃபர்கள் போன்றவற்றையும் ஆன்லைன் தளங்கள் வழங்குவதால், பலரும் பயனடைந்து வருகின்றனர். கடைகளுக்கு சென்று நேரம் செலவழிக்காமல், ஒரே கிளிக்கில் வீட்டின் வாசலிலேயே ஆடை உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பது இந்த விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சிவகாசி பட்டாசு : சிவகாசியில் நேரில் சென்று பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து நமது குட் ரிட்டர்ன்ஸ் தமிழுக்கு சிவகாசி பட்டாசு விற்பனையாளர் ரவிக்குமார் அவர்கள் அளித்த பேட்டியில், தீபாவளி நெருங்கி வரும் வேளையில் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளதாகவும், ஆடி 18 முதல் விற்பனை மெல்ல மெல்ல தொடங்கி தற்போது சூடுபிடித்துள்ளதாகவும், சென்ற ஆண்டை விட சற்று குறைவான விற்பனையே தற்போது வரை இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் ஆர்டர்கள் செய்யும் மக்கள் அதிக ஆர்டர்கள் தருவதால் 11 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், மக்கள் ஆர்டர்களை கொடுத்து விட்டு சற்று பொறுமையை கையாண்டால் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார். பல்வேறு வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆன்லைன்: அதேபோல், தீபாவளி பண்டிகையின் உயிர்நாடியான சிவகாசிப் பட்டாசுகள், இ-காமர்ஸ் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சென்றடைவது இந்த ஆண்டின் மிகப்பெரிய வளர்ச்சியாக உள்ளது. நிறுவனங்களின் பிரத்யேக வலைத்தளங்கள் மற்றும் குறிப்பிட்ட ஆன்லைன் விற்பனை முகவர்கள், அரசின் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றனர். பட்டாசுகளை மொத்தமாக வாங்குவதற்கு ஆன்லைன் தளங்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. பல்வேறு வகையான பேக்கேஜ்கள், புதிய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய பசுமைப் பட்டாசுகள் என பலவிதமான பட்டாசுகள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.
இனிப்பு வகைகள் : வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் முதல் உள்ளூரில் இருக்கும் மக்கள் வரை, தாங்கள் விரும்பும் கடைகளின் பாரம்பரிய இனிப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது தற்போது அதிகரித்துள்ளது. புகழ்பெற்ற பிராண்டுகள் மற்றும் உள்ளூர் இனிப்பகங்கள், தங்களது பிரத்யேக மைசூர்பாக், லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற தீபாவளிப் பலகாரங்களை ஆன்லைன் மூலம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பும் தீபாவளிப் பரிசுக் கூடைகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே ஆர்டர் செய்யப்படுகின்றன. பல்வேறு விலைகளில் கிடைக்கும் இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ் பெட்டிகள் ஆன்லைன் சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மொத்தத்தில், இந்த ஆண்டு தீபாவளி விற்பனையில் இ-காமர்ஸ் தளங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. தள்ளுபடிகள், சலுகைகள் போன்றவை தீபாவளியின் பிரிக்க முடியாத அங்கமாக மாறி வருவதை இது தெளிவாக காட்டுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications