தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ஏர் இந்தியா உள்ளிட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவித்துள்ளன. இதனால், பயணிகள் குறைந்த கட்டணத்தில் தங்கள் பயணத்தை திட்டமிட முடியும். கடந்த ஆண்டை விட இந்த தீபாவளி சீசனில் பல உள்நாட்டு வழித்தடங்களில் சராசரி விமான கட்டணம் கிட்டத்தட்ட 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது.
விமான நிறுவனங்களும் தற்போது அதிகரித்துவிட்டன. இதற்கிடையில் எண்ணெய் விலையும் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்தக் காரணத்தினால் இந்தப் பண்டிகை காலத்தில் விமான பயணிகளுக்கு மிகவும் ஏதுவான சூழல் நிலவுகிறது.

ஏர் இந்தியா: ஏர் இந்தியா பயணிகளுக்கு தங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சிறப்பு விமான கட்டணங்களை வழங்குகிறது. நிறுவனத்தின் இணையதளத்தின்படி, சிங்கப்பூருக்கு ஒரு வழி விமான டிக்கெட்டுகள் ரூ. 7,445 முதல் தொடங்கும், இது அக்டோபர் 8 முதல் 14 வரை செய்யப்படும் டிக்கெட் முன்பதிவுகளுக்கு செல்லுபடியாகும் என்று கூறப்படுகிறது.
மற்ற தினங்களில் இந்த சலுகையை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. ஏர் இந்தியா நிறுவனம் தீபாவளி பண்டிகையையோட்டி இந்த சலுகையை வழங்கி உள்ளது. எனவே பயணிகள் இதன் கீழ் அக்டோபர் 8 முதல் நவம்பர் 30 வரை டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
ஏர் இந்தியா சிங்கப்பூருக்குச் செல்லும் மற்றும் சிங்கப்பூரில் இருந்து திரும்பும் சர்வதேச பயணிகளுக்கும் சலுகைகளை வழங்குகிறது. அதாவது ரூ. 32,231 முதல் டிக்கெட்டுகளைப் பெறலாம். இந்தச் சலுகை அக்டோபர் 14 வரை செல்லுபடியாகும்.
ஏர் இந்தியா சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டாவுக்கு பயணம் செய்வதற்கும் சலுகைகளை வழங்குகிறது. 2025-ஆம் ஆண்டு மார்ச் 20 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை நவம்பர் 17 வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ. 32,611 முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்யும் பயணிகள் பிசினஸ் கிளாஸில் பயணம் செய்ய 10 சதவீத தள்ளுபடியும், எக்கனாமி கிளாஸில் பயணம் செய்ய 10 சதவீத தள்ளுபடியையும் பெறலாம்.
ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு ரூ.200 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது, இது நவம்பர் 30 வரை செல்லுபடியாகும்.
விஸ்தாரா: இந்தக் கட்டுரையை வெளியிடும் வரை, விஸ்தாராவின் இணையதளத்தில் சலுகைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்பு காரணமாக, நவம்பர் மாதம் விஸ்தாரா விமான சேவை நிறுத்தப்படும்.
செப்டம்பர் 3, 2024 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களுக்கான டிக்கெட் விற்பனை படிப்படியாக விஸ்தாராவிலிருந்து ஏர் இந்தியாவுக்கு மாறும். நீங்கள் பயணிக்க இருக்கும் ரூட் ஏர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டிருந்தால், நீங்கள் விஸ்தாராவிலிருந்து ஏர் இந்தியாவுக்குத் திருப்பி விடப்படுவீர்கள்", என்று ஏர் இந்தியா இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ சலுகைகள்: இண்டிகோ செப்டம்பர் 30 வரை ரூ. 1,111 முதல் தொடங்கும் விமானங்களுக்கு சலுகைகளை வழங்குகிறது. இண்டிகோ இன்னும் தீபாவளி பண்டிகைக்கு எந்தவொரு முக்கியமான சலுகையையும் அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications