தீபாவளி பண்டிகைக்கு வெளி மாநிலங்கள், வேறு நகரங்களில் இருப்பவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு வருவதற்குக் கார், பஸ், விமானம் எனப் பல வழிகளில் பயணிக்க முடிவு செய்துள்ளனர்.
விழாக்காலம் என்பதால் அனைத்து தரப்பினரும் சொந்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால் ரயில் கட்டணத்தைத் தவிர அனைத்து போக்குவரத்து கட்டணங்களும் அதிகரித்துள்ளது.
இப்படித் தீபாவளி பண்டிகைக்காக விமானத்தில் டிக்கெட் புக் செய்யச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
தீபாவளி
பண்டிகை காலத்தில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும், தங்களது சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த வகையில் வெளிநாட்டு விமானக் கட்டணத்தைக் காட்டிலும் உள்நாட்டு விமானக் கட்டணம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாட்னா
பாட்னா-விற்கு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து 3 மடங்கு அதிக டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டு உள்ளது. அக்டோபர் 22 ஆம் தேதி டெல்லி டூ பாட்னா செல்ல குறைந்த விலை கட்டணம் 17000 ரூபாய், இதுவே மும்பை டூ பாட்னா 20000 ரூபாய் ஆக உள்ளது.
வெளிநாட்டுப் பயணம்
இதே அக்டோபர் 22 ஆம் தேதி டெல்லியில் இருந்து சார்ஜா செல்ல வெறும் 11000 ரூபாய் மட்டுமே கட்டணம், மேலும் டெல்லி டூ பாங்காக் 10500 ரூபாய், டெல்லி டூ சிங்கப்பூர் 13000 ரூபாய். வெளிநாட்டுப் பயணங்களைக் காட்டிலும் உள்நாட்டு விமானச் சேவை கட்டணம் அதிகமாக உள்ளது, இது விழாக்காலத்திற்காக ஏற்பட்ட டிமாண்ட்-ன் எதிரொலி.
ரயில், பஸ்
மத்திய அரசும், மாநில அரசும் ரயில், பஸ் என அதிகரித்து இருந்தாலும் போதுமானதாக இல்லை. குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள் ரயிலில் மட்டுமே செல்ல முடியும். இப்படிப் பார்க்கும் போது பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்கூட்டியே புக் செய்யப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள்
தக்கல் புக் செய்யப் பெரும் போட்டி உள்ளதால் விமான நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தனியார் பஸ் நிறுவனங்களைப் போல விமான நிறுவனங்களும் விலையை அதிகரித்துள்ளது. இது மக்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications