சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது, ஆனால் எதிர்பார்த்த அளவு மக்கள் வருகை இல்லை என தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஷாப்பிங் டெஸ்டினேஷனான தி.நகரை சேர்ந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமாக தியாகராய நகரில் துணிக்கடை வைத்து நடத்தி வரக்கூடிய நல்லி குப்புசாமி செட்டியார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள தகவலில் நடப்பு ஆண்டின் தீபாவளி பண்டிகைக்காக தியாகராய நகரில் வந்து ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் சரிவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

1950களில் சென்னை தி.நகரில் தீபாவளியின் போது நடைபெற்ற விற்பனையை நினைவு கூர்ந்துள்ள அவர், தீபாவளி பண்டிகை என்றாலே மற்ற மாதங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக துணி விற்பனையாகும் ஆனால் 68 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதில் பெரிய மாற்றம் வந்துள்ளது எனக் கூறினார்.
முதன்முறையாக தீபாவளி பண்டிகை காலத்தில் தி.நகரில் மக்களின் வருகையும் தங்களின் வருமானமும் குறைந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இருந்ததை போல தி.நகர் தெருக்களில் மக்கள் தலைகளை காண முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு இருக்கக்கூடிய அந்த வார இறுதி நாட்களில் கடைகளில் காலடி கூட வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும், ஆனால் தற்போது நிலைமை பெருமளவில் மாறிவிட்டது எனக் கூறியுள்ளார். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சில்லறை விற்பனை தளமாக தி.நகர் தான் திகழ்ந்து வருகிறது.
2019 ஆம் ஆண்டு வரையிலும் பண்டிகை காலம் குறிப்பாக தீபாவளி என்றால் கடைகளில் பெரும் கூட்டம் காணப்படும். ஆனால், கொரோனா தொற்றுக் காலத்தில் இது பெருமளவில் குறைந்தது பின்னர் அது மீண்டு வந்தாலும் பழைய நிலையை எட்டவில்லை என்கின்றனர் வியாபாரிகள்.
வழக்கமாக ஒரு நாளைக்கு 4,000 பேர் தங்களுடைய கடைகளுக்கு வருகை தருவார்கள் ஆனால் இந்த முறை அது 3000 என குறைந்து விட்டதாக நல்லி குப்புசாமி தெரிவிக்கிறார்.
இதற்கு முக்கிய காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் சொல்லப்படுகிறது பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளையும் பொருட்களையும் ஆன்லைன் வாயிலாக வாங்குவதையே விரும்புகின்றனர் ஏனெனில் கூட்டம் நிறைந்து கடைகளுக்கு சென்று துணிகளை பார்த்து வாங்குவதை விட ஆன்லைனில் வாங்குவது சௌகரியமாக இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவரான விக்ரமராஜா நடப்பு ஆண்டில் தி.நகரில் விற்பனை என்பது 30 சதவீதம் வரை சரிந்து விட்டது எனக் கூறியுள்ளார்.ஆன்லைன் ஷாப்பிங் இதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி பல்வேறு பெரிய விற்பனை நிறுவனங்களும் தி.நகர் தவிர்த்து பாடி, குரோம்பேட்டை , புரசைவாக்கம் , போரூர் ஆகிய நகரங்களில் தங்களுடைய கடைகளை திறந்து விட்டன என்பதால் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தி நகருக்கு வராமல் அந்தந்த பகுதியில் இருக்கும் பெரிய கடைகளிலேயே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி விடுகின்றனர் இதுவும் மக்கள் தி.நகர் நோக்கி வருவது குறைந்திருப்பதற்கு காரணம் என கூறுகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications