கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் பெருமளவில் குறைந்திருந்தாலும், கடந்த 2 வருடத்தில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையில் கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்குத் தீபாவளி பண்டிகை பெரிய அளவில் உதவியுள்ளது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் இது 10 வருட உச்சம் என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
தீபாவளி விற்பனை
இந்த வருடம் தீபாவளி விற்பனை மற்றும் வர்த்தகம் நினைத்ததை விடவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, மேலும் மக்கள் நீண்ட காலமாகப் பெரிய அளவில் கொண்டாடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்திருந்த நிலையில் இந்தத் தீபாவளி பண்டிகையின் போது பெரிய அளவில் பயன்படுத்தியுள்ளனர் என அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக் காரணமாக 2 வருடமாக வீட்டிலேயே முடங்கியிருந்த மக்களால் இன்னும் பொழுதுபோக்குச் சேவைகள் முதல் திருவிழா வரை முழுமையாக அனுபவிக்க முடியாமல் உள்ள காரணத்தால், இந்தத் தீபாவளி பண்டிகையின் போது அதிகளவிலான வர்த்தகங்கள் சந்தையில் ஏற்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவே 1.25 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்துடன் 10 வருட உயர்வைத் தொட்டு உள்ளது.
டிசம்பர் 2021
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு இந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது அனைத்து துறைகளையும் சேர்த்து 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருக்கும் எனத் தீபாவளி பண்டிகைக்கு முன்பு கணித்திருந்தது. இதேபோல் இந்த வருடத்தின் முடிவிற்குள் மக்களின் மொத்த செலவின அளவுகள் 3 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தொடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
2020ல் வெறும் 72,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் உருவான நிலையில் இந்த வரும் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் உருவாகியுள்ளதைப் பார்த்து ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டரில் இது வெறும் மக்களின் பழிவாங்கும் நடவடிக்கையா? அல்லது 'ஃபீல்-குட்' மனநிலையின் எதிரொலியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்க கருத்து என்ன..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க..
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications