இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும், இந்திய கலாச்சாரத்தை ஆதரிக்கும் பல லட்சம் வெளிநாட்டவர்களும் இந்த இந்த வருடம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வங்கி ஊழியர்களும் தயாராகி வரும் வேளையில் ஒவ்வொரு வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் வங்கி நிர்வாகம் அவரவர் வங்கி ஊழியர்களுக்கு இனிப்புகளை மற்றும் பரிசு வழங்கும் விதமாகப் பல அரசு வங்கிகள் சிறப்புப் போனஸை அறிவித்துள்ளன.

தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்கள் கொண்டாட உள்ள வேளையில் இதை முன்னிட்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அனைத்து ஊழியர்களுக்கும் தலா 2,500 ரூபாய் தொகையைச் சிறப்புப் போனஸ் ஆக அறிவித்துள்ளது.
2023 வருடாந்திர அறிக்கையின் படி எஸ்பி வங்கியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருக்கும் வேளையில் அனைவருக்கும் 2500 ரூபாய் மத்தியிலான இனிப்பு அல்லது கிஃப்ட் அளிக்க உள்ளது எஸ்பிஐ வங்கி.
எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஒரு ஊழியர்களுக்குத் தலா 2500 ரூபாய் பட்ஜெட்டில் அனைவருக்கும் இனிப்பு அல்லது ட்ரை ப்ரூட்ஸ் வங்கி கொடுக்க Welfare Funds-ல் இருந்து நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த இனிப்பைத் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தொகையை வங்கிகள் இனிப்பு, கிப்ட், வவுச்சராக ஆகவும் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் இதை Competent Authority முடிவு செய்து அறிவிக்கும், இதேபோல் எஸ்பிஐ வங்கியின் சேர்மன் வாழ்த்து அட்டை அனைத்து ஊழியர்களுக்கும் அளிக்கப்பட உள்ளது எனவும் எஸ்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்தியாவின் 2வது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தத் தீபாவளிக்கு ஒவ்வொரு ஊழியருக்கும் தலா 1,000 ரூபாயை சிறப்புப் போனஸ் தொகையை வழங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனது ஊழியர்களுக்குத் தலா ரூ.1,500 வழங்கியுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது பணியாளர்களுக்கு 2,000 ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது, கனரா வங்கி அதன் ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் அறிவித்துள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications