தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் உறவினர்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான்.
அதேபோல் பிரபல நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பும் என்பதும் தெரிந்ததே.
ஆனால் தற்போது போலியாக சில இணையதளங்கள் தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்யும் நடைமுறையை செய்து வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளி வாழ்த்து
தீபாவளி நேரத்தில் சிறப்பு பரிசுகள் கொடுப்பதாகவும் தீபாவளி வாழ்த்துக்கள் கூறுவதாகவும் மெசேஜ்கள் பலருக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த மெசேஜில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
போலி இணையதளங்கள்
சில போலியான இணையதளங்கள், சீனாவில் இருந்து செயல்படும் சில இணையதளங்கள் போலியான தீபாவளி செய்திகளை ஒருசிலரை குறிவைத்து அனுப்புவதாகவும் குறிப்பாக பெண்களுக்கே இந்த இணைப்புகள் அனுப்புவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டாம்
இந்த இணைப்பை கிளிக் செய்தால் அதில் தீபாவளி பரிசுகளை பெறும் வகையில் விவரங்கள் இருக்கும் என்றும் அதில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டால் அதை யாரும் தர வேண்டாம் என்றும் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு வழங்கியுள்ளது.
வங்கிக்கணக்கு காலி
அவ்வாறு தீபாவளி வாழ்த்துக்கள் அடங்கிய மெசேஜை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை தந்தால் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இந்த மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகை நிறுவனம்
முன்னணி நகை நிறுவனத்தின் லோகோவை கொண்டு போலியான இணையதளம் மூலம் சமீபகாலமாக சில வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற போலியான மெசேஜ்களை அனுப்பப்பட்டு வருவதாகவும் இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெலிட் செய்துவிடுங்கள்
அதேபோல் சமூக வலைதளங்களில் வரும் தீபாவளி மெசேஜ்கள் சம்பந்தமில்லாத நபரிடமிருந்து வந்தால் அதை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக வாழ்த்து மெசேஜில் லிங்க் இருந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசை
தீபாவளிப் பரிசு என்ற ஆசையை காட்டி உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திருடுவதற்கு என்றே ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது என்றும் தீபாவளியை சந்தோசமாக கொண்டாட திட்டமிட்டுள்ள இந்த நேரத்தில் இந்த மோசடியில் சிக்கி கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாக்க நமக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பாக யாராக இருந்தாலும் வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் லிங்குகளை கவனமாக படித்து அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னரே கிளிக் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications