தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நாடு முழுவதும் மக்கள் தயாராகி வரும் வேளையில், இப்பண்டிகை கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை உடன் நீண்ட விடுமுறையாகவும் அமைந்துள்ளது. பொதுவாகத் தீபாவளி காலத்தில் நாடு முழுவதும் பெரிய அளவிலான வர்த்தகம் நடக்கும், இதோடு தற்போது 4 நாள் விடுமுறைக் காலமும் வந்துள்ளதால் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டிராவல் துறையும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறத் தயாராகியுள்ளது.
இவ்விரு முக்கிய காரணத்தால் நாட்டில் அனைத்து துறையிலும் தற்காலிக பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதுகுறித்து குவெஸ் கார்ப், ரேண்ட்ச்டாட், அடெக்கோ, டீம்லீஸ் சர்வீசஸ், மேன்பவர் மற்றும் ஜிகின் டெக்னாலஜீஸ் போன்ற ஸ்டாஃபிங் நிறுவனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு போர்டல்கள் கூறுகையில், இந்த வருடத் தீபாவளி பண்டிகை காலத்தில் தற்காலிக ஊழியர்கள் தேவையின் அளவு வருடாந்திர அடிப்படையில் 15-20% அதிகரிப்புடனும், சில துறைகளில் 30-40% வரையிலான அதிகரிப்புடனும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையின் போது புத்தாடை, பட்டாசு, உணவு பொருட்கள் மட்டும் அல்லாமல் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் முதல் கார், பைக் வரையில் மக்கள் புதிதாக வாங்குவார்கள். இதற்கு ஏற்றார் போல் நிறுவனங்களும் தங்களுடைய தயாரிப்புகளுக்கு அதிகப்படியான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
மறுமுனையில் தீபாவளி பண்டிகை 4 நாட்கள் தொடர் விடுமுறையில் வந்துள்ளதால், இந்த விடுமுறையைப் பயன்படுத்தி நாட்டில் பல கோடி மக்கள் குடும்பத்துடன் உள்நாட்டுச் சுற்றுலா, வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல துவங்கியுள்ளனர். இதனால் ஹோட்டல், டிராவல், ஹாஸ்பிடாலிட்டி துறையிலும் அதிகப்படியான வர்த்தகம் இந்த தீபாவளி சீசனில் உருவாகியுள்ளது. பொதுவாகத் தீபாவளி பண்டிகையின் போது இந்த 3 துறைக்கும் மந்தமான வர்த்தகம் இருக்கும்.
இதனால் இந்த வருடம் ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டம் 4 நாளாக மாறியுள்ளது. எனவே மக்கள் அதிகப்படியாகச் செலவு செய்யத் துவங்கியுள்ளனர். இது மட்டும் அல்லாமல் இந்த தீபாவளிக்கு நகரங்கள் மற்றும் கிராமப்புறத்திலும் அதிகப்படியான தொகையை மக்கள் செலவு செய்வார்கள் என கூறப்படுகிறது.
இதேபோல் இந்த ஆண்டு ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி ஆன்லைன் வர்த்தகம் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்ற உள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் இ-காமர்ஸ், லாகிஸ்டிக்ஸ், குவிக் காமர்ஸ், ரீடைல் விற்பனை, BFSI/NBFC மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் அதிகப்படியான தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ஸ்டாஃபிங் நிறுவனங்கள் கூறுகிறது.
இதேவேளையில் இந்தியாவில் பல நிறுவனங்கள் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு அதிகப்படியான போனஸ் தொகையைக் கொடுத்துள்ளது. இதுவும் மக்களின் செலவு செய்யும் அளவீட்டை அதிகரிக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications