முகூர்த்த டிரேடிங் 2022: பங்கு சந்தையில் வணிகம் செய்பவராக இருந்தால், நிச்சயம் முகூர்த்த டிரேடிங் பற்றி அறிந்திருக்கலாம். இந்தியாவில் மிக கோலாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை எனில் அது தீபாவளி பண்டிகை தான்.
இந்த பண்டிகை நாளில் மக்கள் புத்தாடைகள் உடுத்தி, இனிப்புகளுடன் கொண்டாடுவது வழக்கமான ஒன்று தான்.
இந்த தினத்தில் பாரம்பரியமாக இந்திய வியாபாரிகள் பழைய கணக்கு புத்தகத்தை மூடிவிட்டு, இந்த நாளில் புதிய புத்தகத்துடன் கணக்கினை தொடங்குவார்கள்.
ஐதீகம்
அந்த புதிய வணிக கணக்கினை தீபாவளி தினத்தன்று மாலை அமர்வில் குறிப்பிட்ட நேரம் மட்டும் செய்வார்கள். பொதுவாக இந்த நல்ல நாளில் வணிகம் செய்து லாபம் கிடைத்தால், அந்த வருடம் முழுவதுமே லாபகரமானதாக இருக்கும் என்பார்கள். இந்த முகூர்த்த டிரேடிங் தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை அன்று கொண்டாடப்படுகின்றது.
முகூர்த்த டிரேடிங் எப்போது?
முகூர்த்த டிரேடிங் என்பது தீபாவளி நாளில் அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்பட உள்ளது. என் எஸ் இ மற்றும் பி எஸ் இ-ல் ஈக்விட்டி, டெரிவேட்டிவ் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 மணி நேரம் வரையில் வர்த்தகமாகிறது. இதே ப்ரீ ஓபனிங் செசன் மாலை 6 மணிக்கே தொடங்கி, இது 6.08 மணிக்கு முடிவடையும்.
கமாடிட்டி டெரிவேட்டிவ்
இதே கமாடிட்டி டெரிவேட்டிவ் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம். இதில் வர்த்தக பரிமாற்றம் 7.25 வரையில் செய்து கொள்ளலாம்.
கரன்சி டெரிவேட்டிவ் பிரிவில் மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம். இதில் வர்த்தக பரிமாற்றம் 7.25 வரையில் செய்து கொள்ளலாம்.
சந்தேகம் இருக்கா?
இதே எஸ் எல் பி பிரிவில் முகூர்த்த டிரேடிங் வணிகமானது மாலை 6.15 முதல் 7.15 வரையில் வணிகம் செய்து கொள்ளலாம்.
இது குறித்த ஏதேனும் சந்தேகம் இருப்பின் 022 - 45720400/600 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அப்படி இல்லை எனில் bsehelp@bseindia.com என்ற மெயிலை தொடர்பு கொள்ளலாம்.
எதற்காக முகூர்த்த டிரேடிங்?
பொதுவாக தீபாவளித் திருநாளில் லட்சுமி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யப்படும். மக்கள் தங்கள் வீட்டில் செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று பூஜை செய்வார்கள். ஆக இதனை நாம் செய்யும் போது நமக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆக இந்த சிறப்பான நாளில் பங்கு சந்தையில் வணிகம் செய்து அதன் மூலம் லாபம் கிடைத்தால், அந்த வருடம் முழுவதும் லாபகரமான வருடமாக இருக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் இந்த லட்சுமி பூஜை நாளில் தான் இந்த முகூர்த்த டிரேடிங் கொண்டாடாப்படுகிறது. இதனால் இந்த நாளில் வர்த்தகர்கள் 100 ரூபாய் லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications