பொதுவாக நாம் எப்படி தீபாவளி கொண்டாடுகிறோமோ? அதனை போல் முதலீட்டாளர்கள் கொண்டாடும் ஒரு செயல்முறை தான் இந்த முகூர்த் டிரேடிங்.
பொதுவாக இந்த முகூர்த் டிரேடிங் தீபாவளியை ஒட்டி வரும் அம்மாவாசை அன்று செயல்படுத்தப்படும்.
சரி வாருங்கள் பார்க்கலாம்? மூகூர்த் டிரேடிங்க் என்றால் என்ன? ஏன் இது கொண்டாடப்படுகிறது என்று.
முகூர்த் டிரேடிங் எப்போது?
பிஎஸ்இயில் இந்த முகூர்த் டிரேடிங், இந்த வருடம் நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது. இது மாலை 6.15 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் ப்ரீ ஒபனிங் செசன் மாலை 6 மணி முதல் 6.08 மணி வரை இருக்கலாம். முகூர்த் டிரேடிங் நேரம் மாலை 6.15 முதல் மாலை 7.15 மணி நேரம் வரை இருக்கும். இதே நேரத்தில் என்எஸ்இ-யிலும் நடைபெறவுள்ளது.
எம்சிஎக்ஸ் - முகூர்த் டிரேடிங்
இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் (MCX) இந்த முகூர்த் டிரேடிங், இந்த வருடம் நவம்பர் 14 அன்று நடைபெறவுள்ளது. இதில் ப்ரீ ஒபனிங் செசன் மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை இருக்கும். முகூர்த் டிரேடிங் நேரம் மாலை 6.15 முதல் மாலை 7.15 மணி நேரம் வரை இருக்கும் என்றும் எம்சிஎக்ஸ் அறிவித்துள்ளது.
எதற்காக முகூர்த் டிரேடிங் கொண்டாடப்படுகிறது?
பொதுவாக தீபாவளித் திரு நாளில் தான் லட்சுமி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்யப்படும். மக்கள் தங்கள் வீட்டீல் செல்வ செழிப்பும் வளர வேண்டும் என்று பூஜை செய்வார்கள். ஆக இதனை நாம் செய்யும் போது நமக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்று கூறுவாரகள். ஆக இந்த சிறப்பான நாளில் நாம் சந்தையில் செய்து லாபம் கிடைத்தால், அந்த வருடம் முழுவதும் லாபகரமான வருடமாக இருக்கும் என்பது ஐதீகம். இதனால் தான் இந்த லட்சுமி பூஜை நாளில் இந்த முகூர்த் டிரேடிங் செயல்படுத்தப்படுகிறது.
முதலீட்டாளர்கள் ஆர்வம்
இது ஆண்டு தோறும் இந்திய பங்கு சந்தைகளிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் நடைபெற்று வரும் ஒரு சிறப்பு வர்த்தக நாளாகும். இதனால் மற்ற நாட்களில் வர்த்தகம் செய்வதை விட, இந்த நாளில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications