தீபாவளி கொடுத்த பல்பு.. கடைக்காரர்கள் ஷாக், தேங்கிய சரக்குகள்.. அதிரடி முடிவு எடுத்த தொழிற்சாலைகள்..!

இந்தியா முழுக்க அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் தீபாவளி பண்டிகை என்பது வெறும் கொண்டாட்டங்களும் மட்டுமே நிறைந்தது இல்லை, தீபாவளி பண்டிகை என்பது ஒட்டுமொத்த வர்த்தக சந்தைக்கும் மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது துணிக்கடை முதல் நகைக் கடைகள் வரையில் அனைத்து வர்த்தக பிரிவினரும் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வழக்கம்.

தீபாவளி கொடுத்த பல்பு.. கடைக்காரர்கள் ஷாக், தேங்கிய சரக்குகள்.. அதிரடி முடிவு எடுத்த தொழிற்சாலைகள்..!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், பெரும்பாலான கடைகள், ஆன்லைன் வர்த்தக தளங்கள் தீபாவளி தள்ளுபடியை அறிவித்த நிலையில் எதிர்பார்த்த வர்த்தகம் நடக்காத காரணத்தால் வாங்கி வைத்த பொருட்கள் கடைகளிலும், டிஸ்ட்ரிபியூட்டர்கள் மத்தியிலும் தேங்கிக்கிடக்கும் காரணத்தால் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலையில் உற்பத்தியை அதிரடியாகக் குறைக்க உள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த தசரா மற்றும் தீபாவளி சீசன் காலத்தில் 25 சதவீதம் குறைவான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ள காரணத்தால் அடுத்த 2-3 மாதங்களுக்குத் திட்டமிட்ட உற்பத்தி இலக்குகளை 20 சதவீதம் வரையில் குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் ஏற்பட்ட சில மாற்றங்கள் தான் தீபாவளி சீசனில் மோசமான வர்த்தகத்தைப் பதிவு செய்ய முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. செமிகண்டக்டர் சிப், மெமரி சிப் விலை உயர்வின் காரணமாக ஸ்மார்ட்போன் விலை 35-40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் டிவி விலை 20- 25 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே இந்திய மக்கள் அடிப்படையில் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவே அதிகப்படியான தொகையைச் செலவிட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

உதாரணமாக இந்தியா முழுக்க அதிகரித்து வரும் பால் விலை, காய்கறி விலை, உணவுப் பொருட்கள் விலை என அனைத்தும் உயர்ந்துள்ள வேளையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலையில் ஏற்பட்ட உயர்வு என்பது மோசமான வர்த்தகத்தைப் பதிவு செய்ய வழிவகுத்துள்ளது.

இந்த பண்டிகை கால விற்பனையில் ஏற்பட்ட சரிவு என்பது ஜனவரி - செப்டம்பர் மத்தியிலான மொத்த ஸ்மார்ட்போன் மற்றும் டிவி விற்பனையில் சுமார் 10 சதவீத சரிவை உருவாக்கியுள்ளது. ஓணம் முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலத்தில் மட்டும் 30 சதவீத எலக்ட்ரானிகஸ் பொருட்கள் விற்பனை பங்கீட்டைக் கொண்டு உள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது மக்கள் தங்களுடைய கொண்டாட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், மாத சம்பளக்காரர்களுக்குக் கிடைத்த போனஸ் தொகையை குடும்பத்திற்காகச் செலவு செய்ய முடிவு செய்வார்கள்.

மக்கள் மத்தியில் உருவாகும் இந்த அதிகப்படியான பணப் புழக்கத்தைப் பயன்படுத்திக்கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது அதிரடியான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை என்பது பெரும் சோகத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+