தீபாவளிக்கு முன் அதிர்ச்சி.. தள்ளுபடி வருமென நினைத்தால் அதிரடி விலை உயர்வு வருகிறது..!

இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி பண்டிகையின் போது அனைத்து வர்த்தக பிரிவுகளும் பெரும் தள்ளுபடியை அறிவித்து வர்த்தகத்தை அதிகரிக்கும் இதில் முக்கியமாக வீட்டு உபயோக பொருட்கள் பிரிவு அதிரடி தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடும்.

ஆனால் இந்த ஆண்டு பண்டிகை கால விற்பனை துவங்கும் முன்பு அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏசி, எல்ஈடி டிவி, வாஷிங் மெஷின், மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் 5-8 சதவீதம் வரையில் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 தீபாவளிக்கு முன் அதிர்ச்சி.. தள்ளுபடி வருமென நினைத்தால் அதிரடி விலை உயர்வு வருகிறது..!

இப்புதிய விலை உயர்வு அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை யாரேனும் வாங்க நினைத்தால் புதிய விலை நடைமுறைக்கு வரும் முன் வாங்குவது மூலம் சில ஆயிரத்தைச் சேமிக்க முடியும்.

காப்பர், ஸ்டீல், கச்சா எண்ணெய், இறக்குமதி செலவு, பெட்ரோலியம் பொருட்கள் விலை உயர்வு ஆகியவை உற்பத்தி செலவுகளை அதிகரித்துள்ள காரணத்தால் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இப்பிரிவு நிறுவனங்களின் 2026ஆம் ஆண்டில் மட்டும் 3வது முறையாக விலையை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து போர் பிரச்சனை, ஏற்றுமதி - இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, உலோக தேவை ஆகியவை பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் உற்பத்தி விலையில் பெரும் உயர்வு பதிவாகி வருகிறது.

இதன் காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஏசி விலை 5-8 சதவீதம், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், எல்ஈடி டிவி 3-4 சதவீதம் வரையில் விலை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விலை உயர்வு பண்டிகை கால வர்த்தகத்தைப் பாதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சந்தை நிபுணர்கள் மாறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளனர். ஏற்கனவே டீலர்கள், விற்பனையாளர்களிடம் போதுமான ஸ்டாக் இருக்கும் காரணத்தால் இந்த விலை உயர்வு வர்த்தகத்தைப் பாதிக்காது எனவும், தள்ளுபடி மூலம் புதிய விலை தாக்கத்தைக் குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ப்ளூ ஸ்டார், காட்ரிஜ் அப்ளையன்ஸ், ஹேயர், டாய்கின் போன்ற பல நிறுவனங்கள் ஏற்கனவே 4-10 சதவீதம் வரையிலான விலை உயர்வை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+