சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவிலான தடுமாற்றம் எதிர்கொண்டாலும் இந்தியாவில் நிலையாகப் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இன்று 6வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் காரணத்தால் மக்கள் அதிர்ச்சி கலந்த சோகத்தில் உள்ளனர். பொதுவாக 3 நாள் முதல் 5 நாட்கள் விலை உயர்வும், ஆனால் தற்போது 6வது நாளாக உயர்ந்துள்ள காரணத்தால் மக்கள் அதிர்ச்சியுடன் உள்ளன்.
இன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு லிட்டருக்கு 30 முதல் 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை
தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள காரணத்தால் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு அதிகளவில் சென்று வருகின்றனர், இதேபோல் தீபாவளி பண்டிக்கையையொட்டி ஷாப்பிங் செல்வதற்காக மக்கள் அதிகளவில் வெளியில் சென்று வரும் காரணத்தாலும் நாடு முழுவதும் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.
எரிபொருள் தேவை
தீபாவளிப் பண்டிகை விற்பனைக்காக நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ள காரணத்தாலும் டீசல் தேவை அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பே இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டு அளவு கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மானியம் இல்லை
இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த எவ்விதமான மானியமும் அளிக்கப்படாத நிலையில் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
6வது நாளாக உயர்வு
இதனால் இந்தியாவில் தற்போது 6வது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை மூலம் இதன் விலை வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது என்றால் மிகையில்லை. இந்த விலை உயர்வுக்குச் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை விலையும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் முக்கியக் காரணம்.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் இன்று WTI கச்சா எண்ணெய் விலை 0.49 சதவீதம் சரிந்து 83.16 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.27 சதவீதம் அதிகரித்து 83.49 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
இதோடு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 16 பைசா குறைந்து 75.04 ரூபாயாக உள்ளது. இந்தச் சரிவு மூலம் ரூபாய் மதிப்பு ஒரு வார சரிவை பதிவு செய்துள்ளது. இவ்விரண்டும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை (NOV 01)
சென்னை - 106.35 ரூபாய், டெல்லி - 109.69 ரூபாய், கொல்கத்தா - 110.50 ரூபாய், மும்பை - 115.50 ரூபாய், பெங்களூர் - 113.56 ரூபாய், ஹைதராபாத் - 114.12 ரூபாய், கோழிக்கோடு - 110.18 ரூபாய், போபால் - 118.46 ரூபாய், இந்தூர்- 118.49 ரூபாய்.
டீசல் விலை (NOV 01)
இதோடு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசா குறைந்து 75.04 ரூபாயாக உள்ளது. இந்தச் சரிவின் மூலம் ரூபாயின் மதிப்பு ஒரு வார சரிவை பதிவு செய்துள்ளது. இவ்விரண்டும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications