அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவிங் அடுத்த நாள் தொடங்கும் பிளாக் ஃப்ரைடே விற்பனை இப்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவுக்கு எப்படி ஆயுத பூஜை, தீபாவளி நாட்களின் தள்ளுப்படி விற்பனை களைகட்டுமோ அதேபோல் சீனாவில் சிங்கிள்ஸ் டே, அமெரிக்காவில் பிளாக் ஃப்ரைடே விற்பனை. ஆனால் இப்போது இந்தியாவில் பிளாக் ஃப்ரைடே நாள் தள்ளுபடி விற்பனையை பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்திருக்கும் காரணத்தால் இளைஞர்கள் மத்தியில் ஷாப்பிங் மோகம் அதிகரித்துள்ளது.
அமேசான், ஃப்ளிப்கார்ட், மைன்ந்திரா, நைகா, க்ரோமா, டாடா க்ளிக் போன்ற முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் தற்போது பிளாக் ஃப்ரைடே விற்பனையை மிகவும் முக்கியமானதாக பார்க்க துவங்கியுள்ளது. 2-3 வருடத்திற்கு முன்பு சிறிய அளவில் இருந்த விற்பனை தற்போது மிகப்பெரியதாக வளர்ச்சி அடைந்து பெரிய கொண்டாட்டமாக மாற்றியுள்ளன.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 60 சதவீதம் தள்ளுபடி, லாயல்டி பாயிண்ட், இலவச டெலிவரி என எல்லா சலுகைகளும் ஒரே நேரத்தில் குவிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு இது ஜாக்பாட் ஆகவே பார்க்கப்படுகிறது, இதற்காகவே Buy now pay later, கிரெடிட் கார்டு தள்ளுபடிகள், கடன்கள் என அனைத்தும் சேவைகளும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை தளங்கள் இந்த பிளாக் ஃப்ரைடே தினத்தை புதிய வர்த்தக வாய்ப்பாக பார்க்க துவங்கியுள்ளனர். இதை தீபாவளி விற்பனைக்குப் பிறகு மற்றொரு பெரிய வெற்றி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த வருட தீபாவளி பண்டிகையின் போது ஆன்லைன் தளங்கள் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருள்களை விற்று சாதனை படைத்தன. அதற்குப் பிறகு மக்களும் சரி, நிறுவனங்களும் சரி "இனி அடுத்த பெரிய சேல் எப்போது?" என்று காத்திருந்தனர். அதற்கு சரியான பதிலாக வந்துள்ளது தான் பிளாக் ஃப்ரைடே.
பிளாக் ஃப்ரைடே இன்று தான் அமெரிக்காவில் கொண்டப்படுகிறது என்றாலும், இந்தியாவில் பிளாக் ஃப்ரைடே விற்பனை பல நாட்களுக்கு முன்பே ஈகாமர்ஸ் தளத்தில் தள்ளுபடியைத் தொடங்கி விட்டன. இந்தியாவில் இருக்கும் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தக தளங்கள் தற்போது சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் இதை வர்த்தகமாக மாற்றும் வாய்ப்பாக பார்க்கிறது.
இந்த வருடம் பெரு நகரங்களை காட்டிலும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வரும் பெரிய மக்கள் கூட்டம் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் ஷாப்பிங் செய்ய துவங்கியுள்ளதால், இந்த நாளில் நடக்கும் வர்த்தகம் வருடாந்திர அடிப்படையில் 25 சதவீதம் அதிகமாக வாடிக்கையாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
முன்பெல்லாம இப்படிப்பட்ட சிறப்பு விற்பனை எல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிரபலமாக இருந்தன. ஆனால் இப்போது சிறிய நகரங்களிலும் ஸ்மார்ட்போன், இணைய வசதி அதிகரித்ததால் எல்லோரும் இதில் பங்கேற்கிறார்கள். மொபைல், லேப்டாப், ஆடை, அழகு சாதனப் பொருட்கள் என எல்லா பிரிவுகளிலும் தள்ளுபடி இருப்பதால், ஒரே நேரத்தில் பல பொருட்களை வாங்கி விடலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications