தீபாவளி சர்ப்ரைஸ் : ஊழியர்களுக்கு கியா காரை பரிசாக வழங்கிய முதலாளி..!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பரிசுகளை வழங்கிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஒரு மருந்து நிறுவன முதலாளி ஊழியர்களுக்கு காரை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் MITS Healthcare. இத உரிமையாளர், தனது ஊழியர்களுக்கு கியா சோனெட் (Kia Sonet) SUV கார்களை பரிசாக வழங்கியுள்ளார். பஞ்ச்குலா நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் MITS Healthcare நிறுவனத்தின் தலைவரான பாட்டியா மற்றும் இணை நிறுவனர் ஷில்பா சந்தேல் ஆகியோர் ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் பரிசை வழங்கியுள்ளனர்.

தீபாவளி சர்ப்ரைஸ் : ஊழியர்களுக்கு கியா காரை பரிசாக வழங்கிய முதலாளி..!!

நிறுவன வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயல்பட்ட ஊழியர்களை பாராட்டும் விதமாக, நான்கு ஊழியர்களை தேர்வு செய்து பிராண்ட்-நியூ கியா சோனெட் கார்கள் பரிசு அளிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் நான்கு பேரையும் திடீரென ஷோரூமுக்கு வரவழைத்து காரை பரிசாக தந்துள்ளனர்.

உடன் பணிபுரியும் சக ஊழியர்களின் ஆரவாரம், மேள தாள சத்தங்கள் மற்றும் கேக் கட்டிங் ஆகியவற்றுக்கு இடையே ஊழியர்கள் காரை பரிசாக பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. உற்சாக முழக்கங்களுக்கு இடையே இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெறுவது காண்போருக்கும் உற்சாகத்தை தருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்ட நிதின், நிர்மல், வீனுஸ் மற்றும் குர்வீர் ஆகிய நான்கு ஊழியர்களே இந்த கார்களை பரிசாக பெற்றுள்ளனர்.

Also Read

இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வாகனங்களை பரிசாக வழங்குவது இது புதிதல்ல. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போதும், இதே நிறுவனத்தின் தலைவர் பாட்டியா தனது ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் 51 கார்களை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தினார்.

Recommended For You

தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பின்னணியில் இருக்கும் விசுவாசமான ஊழியர்களை கவுரவிக்கும் இந்த செயல், முதலாளிகள் ஊழியர்களை எவ்வாறு ஊக்குவிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவன தலைவரின் செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராடி வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் போது இன்னமும் உழைக்க வேண்டும் என்ற ஊக்கம் அதிகரிப்பதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+